செவ்வாய், ஜூன் 21, 2011

"Tanmatra" - மோகன்லால் நடிப்பில் நான் மெய்மறந்த படம்...



தமிழைத்தவிர பிறமொழி படங்களை பார்த்து அறியாதவனாய் இருந்த 
காலகட்டதில் ஒரு நண்பரினால்  அறிமுகமான படம்  "தன்மாற்ற". அதுவரை  மலையாள  படமென்றால் ஒரு தவறான கோணத்தில் பார்த்து பழகிய  என் சிறுபிள்ளைத்தனத்தை தலையில் கொட்டியது தன்மாற்ற படம். மோகன்லால் என்னும் பெயர் மட்டுமே தெரிந்த எனக்கு அவர் நடிப்பை பிரம்மிப்போடு பார்க்கவைத்தது இந்த படம். Tom hakins, melgibson, Robort Williams போன்ற ஆங்கில பட கதாநாயகர்களுக்கு இணையான நடிப்பை மோகன்லால் அவர்களின் 
நடிப்பில் பார்க்க முடிந்தது. 


            ஒரு அழகான குடும்பம் அந்த குடும்பத்தில் அனைவராலும் விரும்பப்படும் குடும்ப தலைவனாக மோகன்லால். படத்தின்  முதல் பாதி மோகன்லால்  ஒரு மனைவிக்கு நல்ல கணவனாகவும், குழந்தைகளுக்கு நல்ல தந்தையாகவும், அலுவலகத்தில் ஒரு நல்ல மனிதராகவும் வருகிறார். மோகன்லால் திடிரென்று  அவரது மூலையில் ஏற்படும் பாதிப்பால்  அவருக்கு
நினைவு அழிகிறது (memory loss). ஒரு குடும்பத்தலைவன் செயலிழந்தால் குடும்பம் என்ன ஆகும் என்பதுதான் இரண்டம் பகுதி.

   மோகன்லால் கனவான I .A.S தேர்வில் மகன் வெற்றிபெறும் நாளில் மோகன்லால் இறந்துவிடுவது படம் முடிந்தும்
மனம் கரைகிறது.தன்மாற்ற தமிழர்கள் பார்து ரசிக்கவேண்டிய ஒரு அழகான மலையாளப்படம்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக