பணம்,பணம் என்று அலையும் மனித பிண்டங்களுக்கு மற்ற மனிதர்கள் உயிருக்கு போராடுவதையோ இயற்கை அழிவதை பற்றியோ என்ன கவலை இருக்கமுடியும். இயற்கை மனிதர்களுக்கு பல பொக்கிசத்தை தந்துள்ளது அதற்கு மாறாக மனிதன் விசத்தை அல்லவ கக்குகிறான்
"ENDOSULFAN" போன்ற விசத்தை பூச்சிகொல்லி மருந்தாக பயண்படுத்துகிறான். பேராசை
மனிதன் அழிவுக்கு பேராயுதமாக பயண்படுகிறது என்ற ஒற்றை வரி ஏன் அவன் மனதிற்கு புரிவதே இல்லை. நமக்கு வரும் நோய்கள் பாதி நாமாக ஏட்படுத்திய விளைச்சலின் பயிர் என்பது எப்போது புரிந்துகொள்ளப்படும்.
கேரளாவில் கிட்டதட்ட 500 பேரது மரணம் இந்த என்டோசுல்பான் அரக்கனால் வந்த வினை. இது பூச்சிகொல்லி மருந்தில்லை இது ஆட்கொல்லி மருந்து. இதட்கு வெளிநாடுகள் பல தடைவிதித்தும் இந்தியா மட்டும் மெளனமாக இருப்பது இன்னும் 1000 பேர் சாகட்டும் அதுவரை வரும் வருமானம் தடைசெய்யவேண்டாம் என அரசு நினைக்கிறதோ என்னவோ.
என்டோசுல்பானை இந்திய அரசு தடைவிதித்தால் பலரது வாழ்க்கையை காப்பாற்றலாம். எடுக்கும் முடிவை உடனே எடுத்தால் உயிர்சேதம் உடனே தடுக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக