தூம்-2 , ஜோதா அக்பர் , படதிற்கு பிறகு நான் மிகவும் ரசித்த ஜோடி ஹ்ரிதிக் ரோஷனும், ஐஸ்வர்யா ராயும் மீண்டும் ஒரு கலக்கல் படம் "குஜாரிஷ்" தந்திருகிறார்கள் . ஹ்ரிதிக் ரோஷன் ஒரு magic கலையில் கைதேர்ந்தவர் அவரின் வளர்ச்சியை பொறுக்காத அவரது நண்பர் அவரது சாகச நிகழ்வின்போது அவருக்கு விபத்து ஏற்படும்படி செய்கிறார். அந்த விபத்தினால் அவரது
உயிரை தவிர மற்ற பாகங்கள் அணைத்தும் செயலிழந்து கிட்டத்தட்ட 14 வருடம் படுக்கையிலேயே கிடக்கிறார். அவரை கவனித்துக்கொள்ள செவிலிய
ஊழியராக ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். இப்படி அன்றாட வாழ்கையில் ஐஸ்வர்யா ராய்யின் உதவியில்லாமல் எதையும் செய்யமுடியாத முடமாய் இருப்பதை ஒவ்வரு காட்சியிலும் வெளிபடுத்துகிறார். தன் அன்றாட பொழுதுபோக்காக ரேடியோ ஜாக்கி வேலையை செய்கிறார் ஹ்ரிதிக். இவரது உற்சாக பேச்சுகள் பலரது வாழ்கயில் நம்பிக்கை ஒளி ஏற்படுத்துகிறது.
தன்னுடைய அன்றாட வாழ்கையை பொருதுகொள்ளமுடியாமல் தன்னை கருணை கொலை செயும்படி நீதிமன்றத்தில் முறையிடுகிறார் ஆனால் நீதிமன்றம் அவரது
வழக்கை நிராகரிக்கிறது. இந்த விசையத்தை பற்றி மக்களிடம் தனது ரேடியோ முழியமாக கருத்து கேட்கிறார். ஒரு சிலரை தவிர மக்கள் அனைவரும் நிராகரிகிறார்கள்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயின் அழகைவிட அவரது நடிப்பே என்னை மிகவும் கவர்ந்தது. கிட்டத்தட்ட கருணை கொலைக்கு எதிர்ப்பின் அளவே அதிகம் இருந்ததால் அதை செய்ய ஐஸ்வர்யா ராய் முன்வருகிறார். ஒரு செவிலியர் என்ற உறவை தாண்டி ஹ்ரிதிக் ரோஷனிடம் அன்புகாட்டுவதை பார்த்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுகிறார்கள். உடல் தாண்டி மனதின் அடிப்படியாக கொண்ட காதல் என்றுமே மக்கள் மனதில் நீங்க இடம்பிடிக்கும் என்பது குஜாரிஷ் போன்ற படங்கள் நல்ல உதாரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக