சனி, ஜூன் 25, 2011

"CANCER" - ஒவ்வரு வினாடியும் மரணத்தின் வலி


            மனிதனால் கண்டுபிடிக்கமுடியாத பல அதிசயங்கள் இன்னும் இந்த உலகில் மிச்சமுள்ளது. என்னதான் 
விண்யான வளர்ச்சியில் நாம் குளிர்காய்தாலும். இயற்கையை மீறி நம்மால் எதுவும் செய்யமுடியாது.
உதாரணம்: கோடி வருடங்கள் முன்பு வாழ்ந்த dinaser இன்று உயிரோடு இருந்திருந்தால் மனித இனம் அடியோடு 
அழிந்திருக்கும். இயற்கை நம்மேல் காட்டிய கருணைதான் dinaser  இனம் அழிந்து நாம் உயிரோடு இருக்கிறோம். 

  ஏதோ ஒரு காரணம் இல்லாமல் இயற்கை ஒரு துரும்பைக்கூட அசைபதில்லை அப்படியான அடிப்படையாக கொண்ட இயற்கை எதற்காக cancer என்னும் உயிர்கொல்லி 
நோயை மனிதனுக்குள் புகுத்தியது. எத்தனையோ மனித ஜீவன்கள் வாழும் இந்த அதிசைய பூமியில் ஏன் ஒருசிலர்கு மட்டும் இப்படியான
நோய் வந்து வாழ்கையை சூனியமாக்குகிறது. 
இந்த cancer உடல்முழுக்க பரவி இது என்னட பிறவி என்று ஒவ்வரு நாளும் ஒவ்வரு நொடியும் வாழ்க்கை விரக்த்தியின் எல்லையை அடைகிறது.
ஒவ்வரு பாகமாக செயலிழந்து வாழ்கையில் சுகம் என்பதே மறந்து ஒவ்வரு நொடியும் வலியோடு நம்மை விட்டு போக துடிக்கும் உயிரை கையில் பிடித்துகொண்டு. எப்போது எமன் நம்மை சமன் செய்ய வருவானோ என்ற
பயத்தோடு இருக்கும் அவர்களிடம் என்ன சொல்லி ஆறுதல்படுத்த முடியும். நான் என்ன தப்பு செய்தேன்? எனக்கு ஏன்  இந்த தண்டனை? என அவர்கள் கேட்கும் கேள்விக்கு  என்ன பதில் நம்மால்  சொல்லிவிடமுடியும்.  
     

உயிர் எப்போது வேண்டுமானாலும் போகும் என்ற நிலையில் என்ன ஆறுதலை சொல்லமுடியும் நம்மால். வலி உயிர் போகிறது என்று துடிக்கும்போது எப்படி நம்மால் அதை தடுத்து நிறுத்தமுடியும். அழுது கண்ணீர் வற்றிப்போச்சு. காய்ந்த கண்கள் காணும் காட்சி ரத்த கண்ணிரே மிச்சமாச்சு. cancer நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முடியாவிட்டாலும் அவர்களது உணர்வின் வெளிபாட்டை நம்முடைய உண்மையான அன்பின் மூலமாக அவர்கள் நினைவை காப்பற்றலாம்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக