வியாழன், ஜூன் 23, 2011

பேனரும் தமிழ் கலாச்சாரமும்...


நம்மை சினிமாவும், அரசியலும் நல்வழிபடுதுதோ! இல்லையோ! மக்களிடத்தில் ஒரு தேவையற்ற கலாச்சாரத்தை பதியவைத்துவிட்டது
அதுதான் பேனர் கலாச்சாரம். சினிமாகரர்களும், அரசியல்வாதிகளும்தான் இப்படி தங்கள் முகத்தை மெகாசைஸ்ல் காட்டி வாகனங்கள் இடையுறு செய்து கூத்தடிகிரார்கள் என்றால் மக்களுக்கும் அந்த வியாதி பரவிவிட்டது என்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது.
ஏழை முதல் பணக்காரர்கள் வரை பாரபச்சம் இல்லாமல்
திருமண நிகழ்சிகளில் வெட்டி செலவு செய்து பேனர்
வைத்து அந்த திருமணதிற்கு சம்பந்தமே இல்லாத பலர் ஜோடிபொருத்தம் எப்படி என்று விமர்சிக்கும்படியாகவும்
வாகன இடையுறு செய்வதுபோலும் பேனர்கள் வைகிறார்கள்.
இதுபோல் பேனர் வைப்பது யாருக்கு லாபம்?. இந்த பேனர் செலவுக்கு ஒரு நாலு அனாதை குழந்தைகளுக்கு சோறு போட்டால் அவர்கள்  வாழ்க்கை செழிக்கும். ஒரு நாள் கூதாக வைக்கும் பேனரினால் எந்த பயணும் இல்லை தேவையற்ற விளம்பரம் தேவையில்லாத பிரச்சனைகளையே உண்டாக்கும்.

குறிப்பு: இந்த பேனர் ரசாயன கலவையால் செய்யப்படுபவை இதை எரித்தால் நச்சுப்புகை வெளிவரும். அத்தோடு கிழித்து தூர எறிந்தால் ஆடு,மாடுகள் சாபிட்டு உயிர் இலக்கும்.  வீடிட்குள் வைத்துகொள்கிறேன் உனக்கென்ன கவலை என்று நீங்கள் கேட்டல் என்னுடைய பதில் உங்கள் வீட்டில் குப்பையாக பயண்ணற்று போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக