முதல் காதல் என்பது ஒரு இனிமையான அனுபவம். வாலிப வயதின் துவக்கம், ஒரு அழகான பட்டாம்பூச்சி மனதுக்குள் ரக்கைகட்டி பறக்கும். அது உடம்புக்குள் நடக்கும் மாற்றத்தின் வெளிப்பாடுதான் என்றாலும் முதல் காதல் மனதின் சாரலாய் ஜில்லிட்டுக்கொண்டே இருக்கும். பருவ வயதில் காதல் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணிற்கும் தவிர்க்க முடியாத ஒன்று. அதுகூட இலையென்றல் வாழ்கையில் சுவாரசியமேது.
முதல் காதல் என்பது இனம்புரியாத பரவச காந்தம். அதன் ஈர்ப்புவிசை புவியீர்ப்புவிசையைப் போன்றது. அது மனதின் ஆழத்தில் சென்று தங்கிவிடுகிறது. காதல் என்பது தவிர்க்க முடியாத தவிர்க்க கூடாத ஒன்று. எல்ல காதலும் வெற்றிபெறுவதில்லை என்றாலும் தோற்ற காதலுக்கு தனி மரியாதையுண்டு.
தோற்ற காதல் அப்போது மனதுள் காயமாய் வலித்தாலும் காலப்போக்கில் காயம் மறைந்து வெறும் வடுமட்டும் நம் மனதில் அந்த காதல் ஒரு நல்ல அனுபவமாய் தங்கிவிடுகிறது. நாம் உருகி உருகி காதலித்தவள் காலத்தின் கட்டாயத்தினால் நமக்கு கிடைக்காமல் போனாலும் எங்கேயோ சிறப்பாக வாழ்ந்தால் சந்தோசப்படும் மனதுதான் உண்மையாக அவர்களை காதலித்ததற்கான அடையாளம். கிடைக்காத காதலி மீதும் அன்பு செளுத்திப்பாருங்கள் முதல் காதல் மனதால் முழுமை பெரும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக