வெறும் பொழுதுபோக்கை மட்டுமே மையப்படுத்தி கலாசார சீரழிவிற்கு காரணமாய் இருக்க கூடிய தொலைக்காட்சி அலைவரிசைகள்
மத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி கொண்டுடிருக்கும் டிச்கோவேரி சேனல் தமிழ் தொலைக்காட்சி தெளிவான
தமிழ் உச்சரிப்பின் மூலம் அணுவிலிருந்து அகிலத்தை நம்மால் உணர முடிகிறது. டிச்கோவேரி சேனல் தமிழ் முற்றிலும் மாறுபட்ட நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட விசயங்களை நம் வீடிட்கே கொண்டு சேர்க்கிறது என்றால் அதை நாம் வரவேற்க வேண்டிய ஒன்று. ஒரு சூறாவளியை, சுனாமியை நம் கண்முன் நிறுத்தி நமக்கு இயற்கையின் பிரம்மிப்பையும், ஆச்சரியத்தையும் அதனால் ஏற்படும் பேரழிவையும் நமக்கு கண்முன்னே காண்பிக்கப்படுகிறது என்றால் அதன் ஆச்சரியத்தை நம் மிகைப்படுத்தி கூராவிட்டாலும் அதுவே உண்மையாகிறது.
பறவைகள் முதல் கடலில் வாழும் சுறா மீன்கள் வரை எல்ல உயிரினங்களையும் நாம் பிரமிக்க தக்க வகையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் அதன் உடல் சம்பந்தப்பட்ட அத்தனை விசயங்களையும் நமக்கு அக்குவேராய் ஆணிவேராய் நமக்கு
காட்சியளிப்பது உலகத்தின் அதிசயங்களை நமக்கு சாட்சியமாக்கி இருகிறது. நாம் பார்க்கும் விஷயங்கள் வெறும் பொழுதுபோக்காய் மட்டும் இல்லாமல் அது நமக்கு நிறைய செய்திகளை தருமானால் அதை நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். பிரபஞ்சம் ஒரு விஸ்தாரமான மிக பிரமாண்டமான ஆற்றலை கொண்டது. அதை நாம் சாதாரண கண்ணோட்டத்தோடு பார்த்தால் அது நமக்கு சாதரணமாகவே காட்சியளிக்கும். உலகத்தை நாம் அறிவுகண் கொண்டு ஆராய்ந்தால் உலகம் ஒரு மிக பெரிய அதிசயம். அதில் மனிதன் என்ற நாமே ஒரு மிகபெரிய அதிசயம் என்பது புலப்படும்.
மனிதன் வாழ மிக முக்கியமான அம்சமாக இருக்ககூடிய ஒன்று மரங்கள். மரங்கள் நமக்கு தரகூடிய அத்தனை விஷயங்களுமே மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று. மரம் நமக்கு உற்ற நண்பன் அதை அழிபதனால் நமக்கு நாமே சமாதி கட்டிகொல்கிறோம்.அத்தகைய மரங்கள் தாவரங்கள் அதனால் நிகழக்கூடிய் அதிசங்களை நமக்கு துல்லியமாக விளங்கவைய்கிறது
டிச்கோவேரி சேனல் தமிழ்.
நமது கலாச்சாரமாகிய சிற்பங்கள், கோவில்கள் கல்வெட்டுகள் என்று அனைத்தின் சிறப்பம்சங்களையும் ராஜராஜ சோழன் முதல் ராஜேந்திர சோழன் வரை கட்டப்பட்ட கோவில்கள் பற்றிய உண்மைகள் நம்மால் கற்பனை கூட செய்து பார்த்திராத விசயங்களை நமக்கு நம் கண்முன்னே காண்பிப்பதில் சிறந்து விளங்குகின்றது
டிச்கோவேரி சேனல் தமிழ் என்றால் அது மிகையாகத்து. நாம் மறந்துபோன மற்றும் தெரிந்துகொள்ளாமல் போன விஷயங்கள் என்ற அதனை அதிசயங்களும் நாம் அறிந்துகொள்ள இந்த சேனல் உதவுகிறது. உலகம் எப்பேர்பட்ட அதிசயம் என்பதும் அதில் எப்படி நாம் வாழுகிறோம் என்பதும் நாம் இதுவரை அறிந்திடாத விசயங்களை நமக்கு சாட்சியம் ஆக்குகிறது இந்த சேனல்.
இதுவரை நடந்த உலக அழிவுகள் மற்றும் இயற்கையின் மாறுபட்ட செயல்களை ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்கவைகிறது இந்த சேனல். ஹிட்லர் பற்றியும் இரண்டாம் உலக போர் பற்றிய காட்சிகளும் வர்ணனைகளும் உலகம் எத்தகைய சூழலை சந்தித்தது போன்ற விசயங்களை, செய்திகளை நம்மால் உணர முடிகிறது. இயற்கை வரம்பில்லதது அதன் வடிவமைப்பு அலாதியானது. பிரபஞ்சம் ஏன் தோன்றியது? எப்படி தோன்றியது? எந்த கேள்விகளுக்கும் நம்மால் சரியான பதிலை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
இந்த அதிசயங்களை பார்க்க வாய்ப்பு கிடைப்பதே ஒரு அரிதான விஷயம் தான், அது நமக்கு சுலபமாய் கிடைகிறது என்றால் அது நாம் கண்டிப்பாக வரவேற்கதக்க விஷயம் தான்.
மனிதனின் கண்டுபிடிப்புகள் உலக அதிசயங்கள் என்று எத்தனை விசயங்களை உள்ளடக்கியது இந்த உலகம். இந்த இயற்கை நமக்கு முன்பும் இருந்தது, இப்போதும் இருக்கிறது நமக்கு பின்பும் இருக்கும் ஆனால் நாம் தான் இந்த இயற்கை போன்று நிலையாக இருபதில்லை நாம் வாழும்போதும் சரி வாழ்த்து மடிந்த பின்னரும் சரி நாம் என்றுமே நிலையானவர்கள் அல்ல. இதைத்தான் இரண்டு உலக யுத்தங்களும்
நமக்கு சாட்சியமளிகின்றது.
வாழ்த்து நாம் இயற்கையை நேசிக்க கற்றுகொண்டால். நமக்கு வாழ்கை சிறப்பானதாக இருக்கும். ஆகையால் பொழுதுபோக்கு நிகழ்சிகளை குறைத்து கொண்டு வாழ்கையின் பரிணாம வளர்ச்சியை பற்றியும் அணுவிலிருந்து அகிலம் உருவானதை பற்றியும் அறிந்து பயனடைய டிச்கோவேரி சேனல் தமிழ் நிகழ்ச்சியை பாருங்கள். உண்மை புலப்படும். நீங்கள் நன்மை பெறுவீர்கள்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக