சக்தி நீ ரொம்ப அழகா இருக்க. நீ பார்க்க வெளிநாட்டு பொண்ணு மாதிரி இருக்க. எனக்கும் உன்ன மாதிரி ஒரு பொண்ணு இருந்தா. உன்ன பார்க்கும் போது என் பொண்ண பார்கர மாதிரியே இருக்கு. அப்படியே உன்னோட கண்கள் என் பொண்ணோட கண்கள் மாதிரியே இருக்கு. என்னோடைய ஆராய்ச்சி நான் செய்த சாதனைகளும் அதற்கு நான் சந்தித்த சோதனைகளும் நீ நினைத்துகூட பார்த்திருக்க மாட்டாய் . என் ஆராய்சிக்காக நான் என் குடும்பத்தையே இழந்தேன். சக்தி நான் ஒரு கொலைகாரன உன் கண்ணிற்கு தெரியலாம். ஆனால் நான் கொலை செய்யும் பொது நான் அனுபவிச்ச துன்பங்கள்தான் என்ன கொடூரம கொலை செய்ய வைக்கிறது . சக்தி நானும் என் குடும்பத்தோட சந்தோசமா இருந்திருப்பேன். ஆனா, என்ன இந்த நிலைக்கு கொண்டுவந்த இந்த அரசையும், அரசாங்கத்தையும்
பழிவாங்கியே தீருவேன் என்று ஆவேசமாக தன் வரலாறு பற்றி கூரி கொண்டிருக்கும்போது சக்திக்கு இருமல் வந்தது.
இரு சக்தி என்றபடி சக்தியின் வாயில் உள்ள துணியை எடுத்துவிட்டு சக்திக்கு தண்ணிர் கொடுத்தான்.
உங்க பெயர் தெரிஞ்சுகலாம?
ராபர்ட்.
நீங்க ஒரு அணு
விண்யானியா?
ஆமாம்.
எதுக்காக இப்படி அப்பாவிகளை கொலை செய்யரீங்க?
எனக்கு அப்பாவின்னு யாரும் தோணலை எனக்கு அளிக்கப்பட்ட அநீதிக்கு நான் பழிவாங்க நினைக்கறேன்.
உங்களமாதிரி பாதிக்கப்பட்ட எல்லோரும் கொலை செய்ய ஆரம்பிச்சா மனுஷங்க உயிர் வாழவே முடியாது.
என்னை பொறுத்தவரை நான் செய்யறது சரிதான். நான் கஷ்டப்பட்டு அணுவிலிருந்து கண்டுபிடிச்ச ஒரு மனிதனுடைய செல் மற்றும் ஹீமோக்ளோபின வடிவம் மாற்று முறையியால ஒரு கேன்சர் உள்ளவரைக் கூட காப்பாத்தி அவருக்கு அணுவோட "பாயிண்ட் ஜீரோ டைமென்சன்" மூலமா செல் மாற்றும் ஒரு அற்புதமான ஒரு கண்டுபிடிப்பை என்கிட்ட இருந்து அரசாங்கம் பரிச்சதும் இல்லாம அந்த கண்டு பிடிப்பு மனித வர்கத்துக்கு எதிரானதுனு சொல்லி என்னை கைது செய்துடாங்க. என்னுடைய அபாரமான கண்டுபிடிப்ப அவங்க அலட்சியம் செய்ததும் இல்லாம என்னை கைது செய்தது என்னால ஏத்துக்க முடியலை. என்ன கைது செய்ததைப் பார்த்து என் மனைவியும், என் ஒரே மகள் உன்ன மாதிரியே அழகா இருப்பா அதே கண்கள் அவ அழகை பார்த்து அவளுக்கு
ரோசலின்னு பெயர் வைத்தேன் இருவரும் தற்கொலை செய்துகிட்டாங்க. அரசாங்கம் நான் அந்த பார்முலாவ வெளிநாட்டுக்கு விற்க முயற்சித்ததா என் மேல பொய் குற்றச்சாட்டு விதிச்சாங்க. கிட்டதட்ட பத்து வருஷம் ஜெயிலையே பார்த்துகிட்டு இருந்தேன். ஒரு நாள் ஒரு சந்தர்பம் கிடைத்தது அங்க இருந்த காவலாளிய கொலை செய்துட்டு அவன் டிரஸ், துப்பாக்கி எல்லாதையும் நான் எடுத்துகிட்டு வந்துட்டேன்.
ஆனா எதுக்காக சிவா, ராஜு, அனிதாவை கொலை செய்தீங்க?
நான் தப்பிச்சு பாண்டிச்சேரி போனேன் அங்க என்னுடைய பழைய நண்பர் ஒருவர் அவருகிட்டா போனேன் என்னை யாருக்கும் தெரியாம அவரு பார்த்துகிட்டார். அவரு ஒரு பெரிய திட்டத்தை எனக்கு சொன்னார். அதன்படி சென்னையில இருக்கற ஒரு பெரிய வங்கியை கொள்ளையடிகரதான் அதற்கு என்னுடைய விஞ்யான மூலை தேவைபட்டது.எனக்கும் இந்த அரசாங்கத்தை பழிதீர்க்க ஒரு சந்தர்ப்பம் ஆகையால் அதை செய்ய ஒப்புக்கொண்டேன். திட்டம் தயாரானது.திட்டத்தை
செயல்படுத்த சென்னையை முழுவதும் தெரிஞ்ச ஒரு ஆள் தேவைப்பட்டபோது தான் எங்களுக்கு சிவா அறிமுகமானான்.
அதை செய்ய சிவாவை நாங்கள் பயன்படுத்த நினைத்தோம். சிவா முதலில் எங்க வலையில சிக்கவில்லை கொஞ்சம் கொஞ்சமாக அவனை திட்டதிற்கு ஒப்புக்கொள்ள வைத்தோம். அவனுக்கு பணத்தாசை காட்டி எங்க திட்டத்தை நாங்க அவன்கிட்ட சொல்லும்போது அவன் எங்களுக்கு தெரியாம வீடியோ எடுத்து எங்களையே பயமுறுத்தினான். அதனால அவனை கொலைசெய்தோம். அவன் பதிவு செய்த வீடியோவை தேடினோம் அந்த முயற்சியில் ராஜுவையும், அனிதாவையும் கொலை செய்ய நேர்ந்தது. இதுக்குமேல அந்த வீடியோவை தேடி கொலை செய்வது புத்திசாலித்தனம் இல்லை.அதனால் உன்னை கடத்தி எங்க திட்டத்தை உன்னுடைய கணவனை செய்ய வைக்க திட்டமிட்டோம். எங்க வேலை முடிஞ்சதும் உன்னை உயிரோட விட்டுவிடுவோம். நீ உயிரோட திரும்பி போகறது உன் கணவனுடைய பொறுப்பு.
(சுவாரசியம் தொடரும்...)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக