அர்ஜுன் ஜோதியிடம் அவளது பெயரை கேட்டுவிட்டு தனது சீனியரிடம் சென்று சொல்கிறான்.
அண்ணா அவங்க பெயர் பூஜா!
எது அண்ணாவா? மரியாதையா சார்னு கூப்பிடு.
ஓகே சார்!
எங்க காலேஜ் ரைம்ஸ் சொல்லு!
சார் அது எனக்கு தெரியாது சார்!
தம்பி உன் பெயர் என்ன சொன்ன.... அர்ஜுன் இங்க வா நான் சொல்லித்தரேன்.என்று ஒரு சீனியர்
மைட்டி! மைட்டி! சீனியர் சார்.. என்ற ரைம்சை சொல்லிகொடுத்து அர்ஜுனை சொல்ல சொன்னான்.
அர்ஜுன் நான்கு முறை சொன்னதும் தனது முதல் நாள் வகுப்புக்கு செல்ல அனுமதி கேட்டான்.
கிளாஸ் போகனுமா! போ... ஒரு நிமிஷம் பூஜா எங்கிருந்து வரா அப்டிங்கற விபரத்தை கிளாஸ் முடிந்ததும் நீ என்கிட்ட வந்து சொல்லணும்!
சார்! உங்க பெயர்?
எதுக்கு என்னைப்பற்றி ரிப்போர்ட் செய்யவா! கிளாஸ் முடிந்ததும் இதே இடத்திற்கு வா நாங்க இருப்போம் இப்ப கிளம்பு! என்று குத்தலாக பதில் சொன்னான் சீனியர் ரமேஷ்.
ஓகே சார்! என்று அர்ஜுன் தனது வகுபிட்கு கிளம்பினான்.
அர்ஜுன் முதல் நாள் என்பதால் வரவேற்புரை நடந்து கொண்டிருந்தது. அர்ஜுன் மெல்ல நுழைந்தான். அவன் பார்த்த அத்தனை முகங்களும் புதிது அதில் ஒரு முகம் மட்டும் அவன் சற்று முன்பு பார்த்த பூஜா. மிகவும் அழகாக இருந்தாள். முதல் நாள் என்பதால் பாடம் ஏதும் நடத்தாமல் ஒவ்வொருவராக வந்து தன்னை பற்றி சுய அறிமுகம் செய்து கொண்டார்கள். அவன் வருவதற்கு முன்பே பூஜா பேசிமுடித்துவிட்டு கீழே இறங்கி வந்தாள்.அவள் அர்ஜுனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு போய் அமர்ந்தாள். அவனால் பூஜாவைப் பற்றி அன்று அறிந்துகொள்ள முடியவில்லை. கல்லூரி முடிந்தும் பூஜாவை அவரது அப்பா சுவாமிநாதன் காரில் அழைத்து சென்றுவிட்டார் . அர்ஜுன் மாலை சீனியர் சொன்னது போல் அவர்களை போய் பார்க்காமல் தனது பைக்கை எடுத்துக்கொண்டு வீடிற்கு சென்றான். அர்ஜுன் அவனது அம்மாவிடம் எதையும் மறைக்க மாட்டான். எல்லாவற்றையும் அவன் அம்மாவிடம் சென்று சொல்லிவிடும் சுபாவன் உடையவன்.
வா அர்ஜுன்! உனக்காக ஸ்வீட் செய்தேன். இந்தா சாப்பிடு என்று ஊட்டிவிட்டார் அர்ஜுனுடைய அம்மா கவிதா.
எப்படி இருந்தது முதல் நாள் காலேஜ்?
சூப்பர் அம்மா! என்னை சீனியர் பசங்க ராகிங் செய்தாங்க. ஒரு அழகான பொண்ணுகிட்ட பெயர் கேட்க சொன்னங்க. நான் கேட்டேன் அவங்க பெயர் பூஜா! அப்பறம் அந்த பொண்ணு என் கிளாஸ் தான் படிக்கிறாங்க. சீனியர் அவங்களைப் பற்றி விபரங்கள் கேட்டு சொல்ல சொன்னாங்க. ஆனா அவங்ககிட்ட இன்னைக்கு பேச முடியலை என்று கல்லூரியில் நடந்ததை ஒன்று விடாமல் ஒப்பித்தான் அர்ஜுன்.
ரொம்ப அழகா இருக்குமா அந்த பொண்ணு?என்று கவிதா கேட்டதற்கு வெட்கப்பட்டான் அர்ஜுன்!
இருவரும் பேசிகொண்டிருக்கும் போது அர்ஜுன் அப்பா சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வீட்டினுள் நுழைந்தார்.
என்ன அர்ஜுன் இன்னைக்கு காலேஜ் எப்படி இருந்தது?
நல்லா இருந்தது அப்பா! என்று பதில் சொல்லிவிட்டு அர்ஜுன் தனது அறைக்கு சென்றான். அர்ஜுன் அவன் அப்பா மீது பயம். அர்ஜுன் அப்பா பார்க்க கொஞ்சம் முரட்டுதனமாக தெரியும். அதனால் அவன் அம்மாவிடம் பேசுவது போல் அப்பாவிடம் பேச மாட்டான்.
மறுநாள் அர்ஜுன் சீனியர் கண்களில் படாமல் வகுப்பிற்கு சென்றான். பூஜா அமர்ந்திருந்த இடத்திற்கு பக்கத்தில் சென்று அமர்ந்தான் அர்ஜுன்.அப்போது பூஜா எழுதிக் கொண்டிருந்தாள். அர்ஜுன் பூஜாவை ஓரக் கண்ணால் பார்த்தான். பூஜா திரும்புவதாக இல்லை. அவன் உள்நெஞ்சம் படபடத்தது, பூஜாவிடம் பேசவேண்டும் என்று அவன் மனம் துடித்தது. அர்ஜுன் தன்னை கவனிப்பதை உணர்ந்த பூஜா அர்ஜுனிடம் திரும்பினாள்.
அர்ஜுனிட்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
என்ன அர்ஜுன் இன்னைக்கு மறுபடியும் ராகிங் செய்தார்களா என்று கேட்டாள்?
அவன் சற்றும் எதிர்பாராத அந்த கேள்விக்கு தலையாட்டி பதில் சொன்னான்.
வேற என்ன சொன்னங்க?
அவங்க உன்னைப்பற்றிய விபரம் எல்லாம் கேட்டுட்டு வர சொன்னாங்க.
சொல்லாட்டி என்ன செய்வாங்க?
என்னை வீட்டிக்கு போக விடமாட்டாங்க.
பூஜா மௌனமானாள்.
ப்ளீஸ் எனக்காக உன்னைப்பற்றிய விபரம் சொல்லு.
சரி! நான் படிச்சது கோயம்புத்தூர் அவிலா கான்வென்ட். என் சொந்த ஊர் கோயம்புத்தூர். இப்ப இருக்கிறது பெசென்ட் நகர் சென்னை. அப்பா பெயர் சுவாமிநாதன். அப்பா சொந்தமா பிசினஸ் செய்கிறார். என்று தன்னை பற்றி சுருக்கமாக சொல்லிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தாள் பூஜா.
பூஜாவிற்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினான் அர்ஜுன்!
( நட்பு தொடரும்...)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக