கார்த்திக்கும் நிருபமாவும் காபி டேவில் பேசிகொண்டிருக்கும்போது இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் கார்த்திகை செல் போனில் அழைத்து நிருபமா தங்கி இருந்த அனிதா வீட்டில் அனிதாவை யாரோ கொலை செய்துவிட்டதாக கூறுகிறார்.
கார்த்திக் என்ன ஆச்சு யார் போன்ல? என்று பதட்டமான முகத்தை பார்த்து நிருபமா கேட்கிறார்.
சாரி நிருபமா உங்க தோழி அனிதாவை கொலை செய்துடாங்கலாம்.
வாட்! என்று தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை தாங்க முடியாமல் கதறி அழுதார் நிருபமா.
நிருபமா ப்ளீஸ் அழுக வேண்டம் வாங்க உடனே போகலாம் என்றபடியே காபி சாப்பிட்டதட்கு
பணத்தை கொடுத்துவிட்டு அவசர அவசரமாக இருவரும் பைக்கில் ஏறி அனிதா குடியிருந்த தரமணியில்
உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். அங்கு அந்த அடுக்குமாடியில் குடியிருக்கும் அனைவரும் நின்றுகொண்டிருந்தனர் இன்ஸ்பெக்டர் ரவீந்திரனும் அங்கு இருந்தார்.
இன்ஸ்பெக்டர் எப்படி இது நடந்தது? என்று நிருபமா பதட்டத்துடன் கேட்டார்.
நிருபமா பதட்டப்படாம இப்படி உட்காருங்க என்று பக்கத்தில் உள்ள சோபாவில் அமர சொன்னார் ரவீந்திரன், நிருபமா அனிதாவின் உடலை பார்த்த படியே பயந்த முகத்தோடு
அங்கு உள்ள சோபாவில் அமர்ந்தார். பிறகு பேச ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன்
நீங்க இல்லாத போது அந்த கொலைகாரன் இங்க வந்திருக்கான். அவன் மோடிவ்
கொலை செய்யறதுதான் நீங்க இல்லை அதனால உங்க தோழியை கொலை செய்துட்டு அவன் கைரேகைய பதிவு செய்துட்டு "முடிஞ்சா
என்ன பிடிச்சுகோ" அப்படின்னு எழுதிட்டு போயிருக்கான்.
நிருபமா முகம் இருகிப்போய் பயத்தில் நடுங்கிறார். நிருபமா நீங்க இருக்கிறதை அவன் பின்தொடர்ந்து வருகிறான். அதனால நீங்க தனியாவோ, உங்க குடும்பத்தோடோ நீங்க தங்கினா உங்களுக்கோ உங்க குடும்பத்திற்கோ ஆபத்து அதனால நான் என் மேல்அதிகாரிங்ககிட்ட பேசி உங்களுக்கு இந்த கேஸ் முடியற வரைக்கும் முழு பாதுகாப்பு
தர ஏற்பாடு பண்றேன் என்று கூறிக்கொண்டிருக்கும்போதே நிருபமாவிட்கு ஒரு புதிய நம்பரில் இருந்து போன் கால்
வந்தது.நிருபமா பதட்டத்துடன் அதை ஆன் செய்தார்.
மறுமுனையில் அதே குரல்.
( பயம் தொடரும்...)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக