எந்த திரைப்படம் நம்மை மூன்று மணி நேரம் நம்மையே மறக்கச் செய்கிறததோ அதுவே நல்ல திரைப்படம். அந்த மூன்று மணி நேரம் நமக்கு காண்பிப்பது நல்லதும்,கெட்டதும் சேர்ந்த ஒரு கலவை தான் என்றாலும் அந்த திரைப்படங்கள் நமக்கு சில விஷயங்களை சீக்கிரம் புரியவைத்து விடுகிறது. அப்படிப்பட்ட திரைப்படம் நல்லவைகளை
நமக்கு காண்பித்தால் நமக்கு நல்ல சிந்தனையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை,
அதுவே தவறானதாக அமைத்தால் சிந்தனை வேறு விதமாக இருக்கும் அதிலும் சந்தேகமில்லை.ஒரு நல்ல திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் அது நம்மை அப்படத்தோடு ஒப்பிடவைக்குமானால், நம்மை திரைப்படம் முடிந்தும் அந்த திரைப்படத்தின் நினைவுகள் நம்மை செயலிலக்கச் செய்யுமானால் அந்த திரைப்படம் கண்டிப்பாக நம் மனதில் ஆழ பதிந்துவிடும்.
"எங்கேயும் எப்போதும்"
இந்த படம் பார்த்துவிட்டு என்னால் எனது வாகனத்தை வேகமாக ஓட்டவே முடியவில்லை என்பதே இப்படம் என்னை பாதித்த முக்கிய விஷயமாகும். எங்கேயும் எப்போது நடக்கக்கூடிய ஒரு விபத்து "எங்கயும் எப்போதும்"என்ற திரைப்படமாக உருவாக்கப்பட்டிருகிறது.
திரைப்படம் ஒரு முக்கிய விபத்தை பற்றிய படம் என்பதால் இயக்குனர் அவர்கள் "அலைபாயுதே" படத்தை பின்பற்றி இருக்கிறார். அலைபாயுதே படத்தில் வருவது போல் ஒரு காட்சி படமாக்கி பின் கொஞ்சம் இடைவேளை விட்டு அந்த காட்சியை முழுமையாகும் போது அதை முழு காட்சியாக காட்டி இருக்கிறார்கள். அலைபாயுதே படத்தின் கடைசி காட்சியை கூட அப்படியே அமைத்திருக்கிறார்கள். சாலினியை விருப்புவதாக மாதவன் கூறும்போது ஏற்படும் உணர்வு சற்று குறைவாகவே ( குறையாகவே) இப்படத்தில்
நமக்கு தோன்றுகிறது காரணம் அது அலைபாயுதே படத்தின் காட்சி என்பதால்.
இந்த படத்தில் குறிப்பிட்டு கூறவேண்டிய ஒரு மைனஸ் இப்படத்தில் வரும் ஹீரோ அடிக்கடி சிகரட் பிடிப்பது. அதை முதலில் வெறுக்கும் கதாநாயகி அனாய ஹீரோவை காதலிக்க ஆரம்பித்ததும் ஹீரோ கேட்காமலேயே சிகரட் வாங்கி தருவதும் சிகரெட் பெட்டியை வைத்து அழகுபார்ப்பதும் ஒரு நல்ல விஷத்தை சொல்வார்கள் என்று நம்பி போன எனக்கு சற்று ஏமாற்றம். மற்றொரு ஜோடியான அஞ்சலிக்கும்,ஜெய்கும் உள்ள காதல் காதலாக தோன்றவில்லை அது நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராத வசனமாகவே காட்சியளிகிறது. அதில் அஞ்சலி ஜெய்யிடம் தண்ணியடிபய என்று கேட்கிறார் அதற்கு ஜெய் இல்லை என்று சொன்னதும் அஞ்சலி கூறும் வசனமாக " நான் மட்டும் ஆம்பளையா பொறந்திருந்த உலகத்துல இருக்கற அத்தன சரக்கையும் அடிச்சிருப்பேன்" என்று ஆணாதிக்க சமுதாயத்தை சுட்டிக்காட்டும் கதாபத்திரம் போதாகுறைக்கு செவிலியர் வேலை செய்யும் கதாபத்திரம் ஊருக்கு மட்டுமே உபதேசம் என்பது போல்தான் உள்ளது. இரண்டு கதானயகிகலுமே தம் அடிப்பது மற்றும் தண்ணி அடிப்பது தப்பில்லை என்பது போல் காட்டுவது குடும்பத்துடன் படம்
பார்க்க வருபவர்களை சற்று சலிக்கவே செய்யும்.
முதல் முதலில் சென்னைக்கு வரும் கதாநாயகி அனாய ஒரு நாள் பழகியதுமே காதலிப்பது முரண்பாடு என்றால் இன்னொரு ஜோடியாக வரும் அஞ்சலி ஜெய்யை
HIV டெஸ்ட் எடுத்து வரசெய்து அதன் பின் ஏதோ ஒப்புக்கு " I LOVE YOU " என்று சொல்வது நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது. பாடல்கள் இரண்டு பாடல்கள் கேட்கும் படியாகவே உள்ளது. ஜெய் இன்னும் விஜய் ஸ்டைலை விடவில்லை அது வளரும் நடிகரான அவருக்கு நல்லதில்லை.
அஞ்சலி இதட்கு முந்தைய படம் " அங்காடி தெரு" போலவே இந்த படமும் இருப்பது போன்ற உணர்வு இரண்டுமே ஒரு கொடூர விபத்தை மையமாக கொண்டவை என்பதால் அவரது அழுகை அங்காடி தெருவை நினைவு படுத்துகிறது.
இவர்கள் அல்லாத ஒரு கல்லுரி படிக்கும் ஒரு பெண் ( தேவதை) போல் மனதில் வந்து பதியும் அந்த பெண் கதாபத்திரம் ஜோதி. அந்த பெண் விபத்தில் மரணமடைவது "GOD FATHER -3 " படத்தில் அல்ப சினோ மகளாக வரும் ஒரு அழகான பெண்ணை அல்ப சினோவை சுடும் எதிரிகள் அவரை குறிவைக்க தவறி அந்த பெண்ணை மரணமடைய செய்கிறது அந்த காட்சி அமைப்பு கிட்டதட்ட அந்த காட்சி நம்மை விட்டு நீங்க கிட்டதட்ட பத்து நிமிடம் ஆகும். அப்படிப்பட்ட ஒரு காட்சி இப்படத்திலும் அந்த அழகான குட்டி தேவதை சாவது மனதை வாட்டியது.ஒவ்வரு கதாபத்திர பின்னனியும் ஒரு குடும்ப அமைப்பில் உள்ள முக்கிய கதாபத்திரம் இப்படிப்பட்ட ஒரு விபத்தால் இறந்தால் அந்த குடும்பம் என்னாகும் என்பதை ஒரு விபத்தை நேரில் பார்த்தல் எப்படி இருக்குமோ அதை படத்தில் காட்டி இருப்பது மக்களுக்கு விபத்து பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்பலாம். இந்த படத்தை தயாரித்த
A.R. முருகதாஸ் இயக்குனர் மற்றும்
நடிகர்,நடிகைகளுக்கும் படத்திற்கு உழைத்த அனைவர்க்கும் ஒரு நல்ல படத்தை கொடுத்தமைக்கு பாரட்டுகள் மற்றும் நன்றிகள்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக