கார்த்திக் இன்ஸ்பெக்டர் ரவீந்திரனிடம் பேசிய பிறகு நிருபமவிட்கு போன் செய்கிறான்.
ஹலோ நிருபமா நான் கார்த்திக் பேசறேன்!
சொல்லுங்க கார்த்திக்!
நிருபமா உங்ககிட்ட சிவா பற்றி பேசணும் உங்கள இப்போ சந்திக்க முடியுமா?
சரி எங்க வரணும்னு சொல்லுங்க நான் வரேன்?
ஓகே கார்த்திக் நான் ஒரு மணி நேரத்துல அங்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு நிருபமா
காபி டே செல்ல தயாரானார்.
நிருபமா காபி டே வாசலில் நின்று கொண்டு கார்த்திக்கு போன் செய்தார்.
கார்த்திக் சார் நான் காபி டே வந்துட்டேன்.
காபி டே உள்ள வாங்க நிருபமா நான் உள்ள இருக்கேன்.
நிருபமா காபி டே உள்ளே சென்று கார்த்திகை சந்தித்தார்.
ஹில்லா நிருபமா! உட்காருங்க! என்ன சாப்பிடரிங்க?
காபி போதும்!
ரெண்டு காபி கொண்டுவாங்க என்று அங்கு உள்ள ஊழியரிடம் காப்பியை ஆர்டர் செய்துவிட்டு
பேச ஆரம்பித்தார் கார்த்திக்.
சிவாவ பத்தி உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க நிருபமா.
கார்த்திக் எனக்கு ஒரு நல்ல சகோதரர் மாதிரி. என்கூட நல்லா பழகுவாரு, நான் சென்னைக்கு வேலைக்கு வந்ததும் முதல் முதலில் எனக்கு
அறிமுகமானது அவர்தான். எனக்கு வேலையில் ஏதாவது சந்தேகம் வந்த உடனே நான் அவர்கிட்டதான் கேட்பேன்.
சரி அவரு எந்தெந்த கேசுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்னு தெரியுமா?
அவரு சமுதாய பிரச்சனைக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பாரு.காசுக்காக அரசு அதிகாரிக செய்யற அட்டுழியங்கள தட்டி கேட்பாரு,
பல முறை தேவையில்லாம மரம் வெட்றத தடுத்திருக்காரு, ராஜீவ் காந்தி கொலை
வழக்குல மூன்று பேருக்கு தூக்கு தண்டனை எதிர்த்து நிறைய நம்ம பத்திரிகைல எழுதினார்
பிறகு வாச்சாந்தி வன் கொடுமைல ஈடுபட்ட வனத்துறையினர் பற்றி எழுதினார். பிறகு
2g அலைகற்றலை வழக்குல ராஜாவுக்கும், கனிமொழிக்கும் இருக்கிற தொடர்பை பற்றி நிறைய எழுதினார். அப்போதெல்லாம் அவருக்கு நிறைய கொலை மிரட்டல் வரும். நான் கூட கேட்பேன் ஏன் இப்படி ரிஸ்க் எடுக்குறீங்கனு? ஆனா அதுக்கு நம்மை பாதுகாப்பது பற்றியே யோசிச்ச அப்பறம் மக்களுக்கு எப்படி உண்மை தெரியும்?.
உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா நிருபமா?
இல்லை கார்த்திக் என்கிட்ட அவரு பார்கர வேலையை பற்றி அதிகம் சொல்லமாட்டார்.
சில நேரத்துல நான் கூட இருக்கும்போது ஒரு சில போன் கால் வந்தா அவரு என்னை விட்டு தனியா போய்தான் பேசுவாரு. பேசிட்டு வரும்போது அவரு முகம் மாறி இருக்கும். நான் கேட்டா. ஒன்றும் இல்லை கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு சொல்லீட்டு போய்டுவார்.
நிருபமா அவர கொலை செய்தவங்க ஏன் உங்களை மிறட்டினாங்க?
அதுதான் எனக்கும் தெரியல கார்த்திக். நான் அவர் கூட இருந்ததால அவரு எல்ல விசயத்தையும் என்கிட்ட சொலி இருபதாக அவங்க தப்ப நினைத்திருக்கலாம். கார்த்திக் சிவா அடிக்கடி பாண்டிச்சேரி போவாரு. நான் கேட்ட நண்பர பார்க்க போனதா சொல்வாரு. எனக்கு தெரிஞ்சு அங்க அவருக்கு நண்பர்னு யாருமே இருக்குறதா எனக்கு தெரியல.
பேசிகொண்டிருக்கும்போது காபி வந்ததும் இருவரும் பேச்சை நிறுத்தி விட்டார்கள். இருவரும் காப்பியை எடுத்து சுவைத்தார்கள்.
காபி நல்ல இருக்க நிருபமா?
நல்ல இருக்கு கார்த்திக்.
நிருபமா உங்கள பற்றி கொஞ்சம் சொல்லுங்க?
நான் பிறந்து வளர்த்தது எல்லாம் திருவனந்தபுரத்துல அப்பா ரயில்வே அதிகாரி,அம்மா வீட்ட பாத்துகறாங்க. அப்பறம் தங்கை +2 படிக்கற நான்
bsc சைகாலஜி முடிச்சுட்டு இங்க வேலைக்கு சேர்ந்தேன்.
கார்த்திக் செல் போன் ஒலித்தது அதை எடுத்து பார்த்தன். அதில் இன்ஸ்பெக்டர் அழைத்திருந்தார்.
இன்ஸ்பெக்டர் சொல்லுங்க?
கார்த்திக் எங்க இருக்கிங்க?
சார் நான் தி-நகர்ல இருக்கேன்.
கார்த்திக் நிருபமா உங்ககோடவா இருகாங்க?என்று பதட்டத்துடன் கேட்டார்.
ஆமா சார்.
கார்த்திக் ஒரு கெட்ட செய்தி நிருபமா தங்கி இருந்த அவங்க தோழி அனிதா விட்டுல அனிதாவ யாரோ கொலை செய்துட்டாங்க.
அதிர்ந்துபோன முகத்துடன் கார்த்திக்.
( அதிர்ச்சி தொடரும்...)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக