திங்கள், அக்டோபர் 24, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்... பாகம் 13



இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தனது மனைவி சக்தியை காப்பாற்ற  என்ன செய்வது என்று புரியாமல் வெறுத்து போய் அமர்ந்திருந்தான். அப்போது ரவிந்தரனுடைய மேல் அதிகாரி தொலைபேசியில் அழைகிறார்.

 ரவீந்திரன் அந்த கொலைகாரன் மறுபடியும் உங்ககிட்ட பேசினான?

இல்லை சார்...
ரவீந்திரன் நீங்க சொன்ன செய்திகளை  வைத்து  ஆராய்ந்து பார்த்தால்  அந்த கொலைகாரன்  ராபர்டா ஆகத்தான் இருக்கணும்.
சார் அவனைப்பற்றி  விபரம் சொல்லுங்க சார்!

ராபர்ட் ஒரு கொடூர கொலைகாரன் அது மட்டுமேல்லை அவன் ஒரு சைண்டிஸ்ட்  அவன் தன்னோட கண்டுபிடிப்பை தவறாக உபயோகிச்சான். அதை எதிர்த்த அவனது மனைவி மகளை கூட அவன்  கொலை செய்திட்டான். அவனை பத்து வருசத்துக்கு முன்னாடி கைது 
செய்து  திகார் சிறையில  அடைச்சோம். அங்கிருந்த ஒரு காவலாளிய கொடூரம கொலை செய்துட்டு தப்பி ஓடிட்டான். அவனை கிட்டதட்ட இரண்டு வருசமா தேடிக்கிட்டு இருக்கிறோம். அவனுடைய புகைப்படதை  உனக்கு மெயில் அனுப்பி இருகிறேன். கொஞ்சம் பார்த்து இந்த கேசை முடிக்கணும். அவனால இனி ஒரு கொலை கூட நடக்க கூடாது. அதை நீதான் பார்த்துக்கணும். உன்னையே அவன் திட்டத்துக்கு பயன்படுத்த நினைக்கிறான் அதனால  நீ அவசரபடாதே!

எஸ் சார்! என்று போனை கட் செய்துவிட்டு தனது கணிப்பொறியை இயக்கினான்.


சிறையில் ராபர்டுடைய இறுகிப்போன முகம் தெரிந்தது. அந்த கண்களில் உள்ள கொலை வெறியை பார்த்து மேலும் வெறுத்து போனான் ரவீந்திரன். ராபர்டுடைய புகைப்படத்தை பார்த்து கொண்டிருக்கும் போது அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

இன்நேரத்துக் நான் யாருங்கறது நீ கண்டுபிடிச்சுருப்பே...

ராபர்ட் என் மனைவி சக்திய ஒன்றும் செய்திடாதே ப்ளீஸ்!

உனக்கு சக்தி உயிரோட வேணும்னா எனக்காக நீ ஒரு கொலை செய்யணும்.

ரவீந்திரன் மெளனமாக ராபர்ட் பேசுவதை பொறுமையோடு கேட்டுகொண்டிருந்தான்.

நீ யார எப்படி கொலை செய்யணும்னு நானும் உனக்கு ஒரு மெயில் அனுப்புகிறேன். அப்பறம் ஒரு விஷயம் இந்த கொலையை பற்றி உன் மேல் அதிகாரிக்கோ வேற யாருக்காவது சொன்ன உன் மனைவிய கொலை செய்திடுவேன்.

என்னை எதுக்காக கொலை செய்ய சொல்ற? நான் ஏன் கொலை செய்யணும்?

அது உன் தலையெழுத்து  சரி நீயே  முடிவு செய்துக்கோ உனக்கு உன்னோட அழகான சக்தி உயிரோட  வேணுமா? இல்லை நான் கொலை செய்ய சொல்ற ஆளோட உயிர் வேணுமான்னு? என்றபடி தொலைபேசி கட் செய்தான் ராபர்ட்.

                                                                 ( விறுவிறுப்பு தொடரும்... )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக