கோவில் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்த முக்கியமான ஒன்றாகும். கோவில் என்பது நமது ஆத்மாவை அமைதிப்படுத்தும் இடம் ஆகும். அனைவர்க்கும் பொதுவான அன்பை மட்டுமே போதிக்கிற இடமும் கூட. இந்த கோவில் மனதின் ஆத்மாவை மட்டும் தூய்மைப்படுத்தவில்லை அழியப்போகும் உடம்பையும் தூய்மைப்படுத்துகிறது. அதனால்தான் "கோவில் இல்லாத ஊரில்
குடியிருக்காதே!" என்று முன்னோர்கள் பறைசாற்றி இருக்கிறார்கள். அதனால்தான் ஊருக்கு ஒரு கோவிலாவது கட்டினார்கள். ஊருக்கு ஒரு கோவில் என்பதே அவ்வளவு சிறப்பு என்றால் கோவிலுக்கு நடுவே ஊராக கும்பகோணம் இருப்பது அன்புக்குள் ஆன்மீகத்தையும், ஆன்மீகதுக்குள் அன்பையும் தேடுவோருக்கு உகந்த இடமாகும்.
அந்த காலத்தில் ராஜா ராஜா சோழனும், ராஜேந்திர சோழனும் கட்டிய மிக பிரமாண்டமான கோவில்கள் இப்போது நினைத்தாலும் இனிவரும் காலங்களில் கூட நினைத்தாலும் அப்படி ஒரு சாதனையை நிகழ்த்திவிட முடியாது. மனதில் உள்ளதை சிற்பமாக்கி. சிற்பதையே கோவிலாக்கும் உன்னதம் இனி யாராலும் நிகழ்த்திவிட முடியாத அற்புதம். காலத்தால் அழியாத பொக்கிஷமாக இருக்கிறது அத்தகைய கோவில்கள். பல ஆண்டுகால
உழைப்பு, பலரது தியாகே அதற்கு சாட்சி.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் எத்தனையோ மனிதர்களை எத்தனையோ வருடங்களை சந்தித்த இத்தகைய கோவில்கள் நமக்கு மனதில் சாந்ததையே ஏற்படுத்துகிறது. பிரம்மாண்டம் என்பது கோவிலில் மட்டுமல்ல நம் மனதிலும் ஏற்படுகிறது அந்த பிரம்மாண்டமான வியப்பு அந்த கோவிலை கட்டிய நம் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. அவர்கள் வந்தோம் வாழ்ந்தோம் என்பதை மீறி அடுத்த தலைமுறைக்கடுத்த தலைமுறைக்கு என்று எண்ணிலடங்கா தலைமுறைகளுக்கு உதவும்படி கோவிலை கட்டியது அதிசயமும்,ஆச்சரியமும் ஏற்படுத்துகிறது.
ஆண்டாண்டு கால நம்பிக்கை அவரவர் வாழ்கையை மேம்படுத்த வைக்கப்பட்ட வழிபாடு என்று இந்த கோவில்கள் எப்போதுமே மக்களுக்கு ஒரு நன்மையை போதிக்கும் போதிமரம். அதை யார் சரியாக புரிந்துகொண்டு கோவிலைப்போல் பொதுப்படையாக அனைவர்க்கும் அன்புகாட்டுகிறார்களோ அவர்கள் அந்த கோவிலை போல் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கிறார்கள். அத்தகைய கோவிலை நாடுபவர்கள் அமைதி என்பது மிக முக்கிய விஷயமாகிறது.
"சாந்தம் லேது! சவுக்கியமும் லேது!" என்ற புகழ்பெற்ற தியாகராஜா கீர்த்தனை சான்று.
அமைதியற்ற மனது எப்போதுமே அலைபாயும் கடலலை போன்றது அதற்கு நிசப்தம் என்பதே கிடையாது. அப்படிப்பட்ட மனது கொஞ்சம் சப்தத்தில் இருந்து விடுபட கோவில் அவசியமாகும்.
கோவிலை கட்டியவர்கள் இப்போது உயிரோடு இல்லை என்றாலும் அவர்கள் கட்டிய கோவிலும், அவர்கள் காட்டிய வழியும் நமக்கு பயன்படுவது போல் அந்த கோவிலை பராமரிக்க நல்ல மனது படைத்த மனிதர்களும், அரசும் முன்வரவேண்டும். அப்போதுதான் நமக்கு பின்னல் வரும் சந்ததிகளுக்கும் அந்த கோவில் முழுமையான ஒரு பிரம்மிப்பை, கலையை, அன்பை, அமைதியை, பக்தியை, நல்லென்னத்தை, மதிப்பை, மரியாதையை, வாழ்க்கையை அக் கோவில் நமக்கு தந்ததை
போல் அவர்களுக்கும் தரும். கோவிலை தூய்மையாக, தாய்மை உள்ளதோடு பராமரிப்பது நமது கடமை. அதுவே இந்த
கோவிலை கட்டிய நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் ஆகும்.
ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய!





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக