காத்திருப்பதே ஒரு சுகமான அனுபவம். காத்திருத்தல் என்பது நம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய விஷயம். ஒரு குழந்தை பிறக்க பத்துமாத காத்திருப்புதான் தாய்க்கு தன் குழந்தை மீது அதிக ஈர்ப்பு வரக்காரணம். ஒன்று நமக்கு உடனே கிடைத்துவிட்டால் அதன் மீது நமக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. அதன்மீது உள்ள மதிப்பு குறைந்துவிடுகிறது. காலப்போக்கில் அது நம் மனதை விட்டு அகன்று விடுகிறது. ஒன்று நினைத்தவுடனே அது நமக்கு கிடைத்துவிட்டால் பிறகு வாழ்கையில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?. அப்படி கிடைக்கும் போது அந்த பொருள் மீது அலட்சியம் ஏற்படுகிறது அதன் பயன்கள் நமக்கு பெரிதாக தெரிவதில்லை. ஒன்றை காத்திருந்து பெறும்போது அதன் உண்மையான மதிப்பு நமக்கு தெரிகிறது. அதன் மேல் நமக்கு ஒரு பாசம் ஏற்படுகிறது. எதையும் வீணாக்கும் சிந்தை நம்மை விட்டு அகன்று விடுகிறது. நமக்கு அதன் மீது சலிப்பு ஏற்படுவதில்லை. ஒன்றை பெற காத்திருக்கும்போது நமக்கு அதன் மதிப்பு முழுமையை உணரமுடிகிறது.
காத்திருத்தல் என்பது ஒவ்வரு நாளும் ஒவ்வரு நிமிடமும் நமக்கு நடந்துகொண்டே இருப்பவை. அதேபோல் காத்திருக்கும் விஷயங்கலும் ஒவ்வொரு வயதிலும் மாறிக்கொண்டே இருக்கும். ஒன்று கிடைத்து விட்டால் அதை மறந்து விட்டு அடுத்த விஷயத்திற்காக காத்திருத்தல் என்பதற்கு மனம் மாறிவிடுகிறது. ஒரு பொருளின் மீதோ நபரின் மீதோ நமக்கு பற்று ஏற்படின் காத்திருத்தல் என்பது மிக நீளமானாலும் அந்த காத்திருத்தல் சுகமாகவே நம் மனதிற்குள் சென்று காத்திருக்கும் நேரத்தில் அந்த இனிமையான நேரங்கள் நம்மை ஆக்கிரமித்து விடுகிறது. எனவே அப்போது காத்திருத்தல் என்பது சுகமாக மாறிவிடுகிறது. அதே பொருள் அல்லது நபர் மீது நமக்கு சலிப்பு வந்த பின்பு காத்திருத்தல் என்கின்ற எதிர்பார்ப்பு மறைந்து கோபமாக அது மாறிவிடுகிறது.
ஒரு சில நேரங்கள் எல்லோரும் ஒரு இலக்கை நோக்கி காத்திருத்தல் என்பது அமைந்துவிடுகிறது. அது அன்றாடம் நாம் பார்க்கும் பேருந்து மற்றும் ரயில் வருவதற்கான காத்திருப்பு யாராலும் தவிர்க்கமுடியாத ஒன்று, அப்படி காத்திருக்கும்போது காத்திருத்தளுக்கான இலக்கு ஒன்றாக இருக்கும்போது அவரவர் எண்ண அலைவரிசை மாறுபடுகிறது. சிலர் அந்த நேரத்தில் தனக்கு நடந்த இனிமையான சம்பவங்களை நினைத்து சந்தோசப்படுவார்கள், சிலர் கவலை என்னும் முகத்தை அணிந்துகொல்வார்கள், சிலர் யாரோ ஒரு சிலர்மீது உள்ள கோபத்தை மனதில் வைத்துகொண்டு மனதுக்குள் திட்டிக்கொண்டிருபார்கள், இன்னும் சிலர் தாங்கள் எப்போதுமே சரியாக நடந்துகொள்வது போல் மற்றவர்கள் பற்றியும், அரசு அதிகாரிகள் பற்றியும் குறை சொல்லிக்கொண்டிருபர்கள், சிலர் எதை பற்றியும் கவலை படாமல் அங்கும் இங்குமாய் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் அந்த நேரம் யாரவது ஒருவருக்கு அலைபேசியில் அழைத்து தன் பொழுது போவதற்காக அடுத்தவர் பொழுதை கலவாடிக்கொண்டிருபார்கள்.ஒரு சிலர் மட்டுமே அந்த காத்திருத்தலை பயனுள்ளதாக்க புத்தகம் படிப்பார்கள். இப்படி காத்திருக்கும் ஒரு செயலுக்கு பல வகையான மனிதர்களின் செயல்வடிவங்களை பார்க்கலாம்.
சிலர் காத்திருத்தல் என்பதில் உடன்பாடு இல்லாமல் சோர்ந்து போய் காத்திருப்பதே தவறு அது நடக்காது என்ற எதிர்மறையான சிந்தையோடு தனது பயணத்தை முடித்துக்கொள்கிறார்கள். காத்திருத்தல் மீது ஒரு வெறுப்பு வந்து விடுகிறது, காத்திருப்பது நடக்காதோ என்கின்ற கவலை வந்துவிடுகிறது. அந்த கவலை இறுதியில் அந்த காத்திருத்தலை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. அதன்பின் காத்திருந்து முயட்சி செய்து வென்றி பெறுதல் என்கின்ற கனவு அறுந்து விடுகிறது. எடுத்ததும் கிடைக்க வேண்டும் என்கின்ற வேகம், காத்திருபதட்கு தயாராக இல்லாமை என்கின்ற தவறான முடிவால் சிலர் தவறான முடிவுகளை எடுத்துவிட்டு பிறகு அதற்காக காலம் முழுவதும் வருத்தப்படுகின்றனர்.
சிலரது காத்திருப்பு அரசிடமும், அரசு அதிகாரிகளிடமும் உள்ளபோது காத்திருத்தல் ஒரு கட்டாயமாக நமக்கு தினிக்கப்படுகிறது. அந்த நபர் தனது இயலாமைக்காக கோபப்படவோ, காத்திருப்பதை கைவிடவோ முடியாது. ஒருவரின் தேவையின் முக்கியத்துவம்தான் காத்திருத்தல் என்கின்ற கால அளவை நிர்னயிக்கிறது. அதற்காக அந்த காத்திருத்தல் அவசியமாகிறது, தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
சிலரது காத்திருப்பு தனிமை என்னும் சோகத்தில் இருந்து மரணம் என்னும் முடிவை நோக்கியதாக உள்ளது. அந்த காத்திருத்தல் சோகத்தையே தரக்கூடியது காரணம் வாழ்கையை வாழும் ஆசை ஒருபக்கம் இருந்தாலும்
தனிமை என்னும் ஒருவித அழுத்தம் , வயது முதிர்ந்து விட்ட நிலையில் உடல் வலிவற்று விரக்தியோடு வாழ்வதை
காட்டிலும் மரணம் சிறந்ததாக காத்திருப்பது ஒரு வகையில் சிலருக்கு அமைந்து விடுகிறது.
சிலர் எந்த முயற்சியும் எடுக்காமலேயே எதற்கோ காத்திருக்கிறேன் என்று தன்னையும் ஏமாற்றிக்கொண்டு பிறரையும் ஏமாற்றுவதும் உண்டு. அது சிறந்ததல்ல நம்முடைய முயற்சி இல்லாமல் எதுவும் நம்மை அடைய காத்திருப்பதில்லை. காத்திருக்கும் சிந்தை மட்டும் நமக்கு நாம் விரும்பியது பெற உதவாது. ஆகவே நல்ல செயலுக்கான சிறந்த முயற்சியோடு கொஞ்சம் வெற்றிக்காக காத்திருப்பது சுகமே! என்பது புரியட்டும் இக்கணமே!







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக