ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

ஓர் இரவில் ஓர் மரணம்... (மர்மத்தொடர் பாகம்- 1 )



காலை முதல் இரவு உறங்கும் வரை எப்போதும் பரபரப்பாய் இயங்கிகொண்டிருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு புதிதாய் குடிவருகிறான் கார்த்திக். தினசெய்தி பத்திரிகையின் ஆசிரியரான கார்த்தி 
கோவையில் இருந்து மாற்றலாகி சென்னை வருவது இதுவே முதல்முறை என்பதால் அவனுக்கு உதவியாக ஒரு ஆளை சமையலுக்கு    ஏற்பாடு செய்யபடுகிறது.அந்த சமையல்காரன் பெயர் ராஜு.

என்ன சார் சண்டே கூட சிக்கிரம் எளு ந்துட்டிங்க? என்ற படியே காபியை கார்த்திக்கிடம் கொடுத்தான் ராஜு.

எங்கம்மா இருந்தவரைக்கும் என்ன ரொம்பநேரம் துங்க விடமாட்டாங்க என்ன சீக்கிரமா எளுந்து குளிக்க சொல்வாங்க அந்த பழக்கம் தான் என்றபடி காபியை குடித்துவிட்டு மெல்ல பால்கனி சென்று நோட்டமிட்டான் கார்த்திக்.

கார்த்திக் பால்கனி வழியாக பார்த்துகொண்டிருக்கும் போது மணி அதிகாலை 4 .00  அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எல்ல வீடுகளும் அப்போது பரபரபற்று  இருந்தது ஒரு வீடு மட்டும் பூட்டி இருந்தது அந்த வீட்டை உற்று கவனித்து கொண்டிருந்தான் கார்த்திக் அந்த பூட்டிய வீட்டில் ஏதோ ஒரு உருவம் நடமாடுவதை போல் அவன் உள்ளுணர்வுக்கு தோன்றியது. அப்போது அந்தவீட்டில் ஒரு விளக்கு திடீர்  என்று எரிந்து அணைந்தது. அவன் சற்று தடுமாறி பயந்தபடி பார்த்தான் அவன் செல்போன் ஒலித்தது.

ஆலோ என்று குரல் நடுக்கதோடு ஒரு பயந்த குரலில் பேசினான் கார்த்திக்.

ஹல்லோ கார்த்திக் எளுந்துடிய நான் சிவா பேசறேன் கீழ பாரு  நான் ஜாகிங் போறேன் இந்த வழியாதான்    எப்பவும் ஜாகிங் போவேன் நீயும் வரியா ஜாகிங் போகலாம் என்றான் கார்த்திக்குடன்  வேலை செய்யும் சிவா .

இட்ஸ் ஓகே சிவா நீங்க போங்க நான் வேற ஒரு நாள் வரேன் என்ற படியே போனை அணைத்து பாக்கெட்டுகள் வைத்துக்கொண்டன் கார்த்திக். அந்த பால்கனியில் இருந்து திரும்பிவந்து மேஜையில் அமர்ந்தான் கார்த்திக்.

என்ன சார் இந்த குளுர்லையும் உங்க முகம் இப்படி வேர்த்திருக்கு? என்று கேட்டான் சமையல்காரன்   ராஜு.

ஒண்ணுமில்ல ராஜு  ஐ  ஆம் ஓகே என்றபடி குளிக்க சென்றான் கார்த்திக்.

மணி காலை 7  கார்த்திக் தன் உடைகளை மாற்றிக்கொண்டு ஆபீஸ் செல்ல தயாரானான் கார்த்திக், அப்போது அவனது செல்போன் சிணுங்கியது.

ஹலோ என்றான் கார்த்திக் மறுமுனையில் பேசியவர் சொன்ன செய்தி கேட்டு அதிர்ந்துபோய் நின்றான். அப்போது பக்கத்தில் இருந்த ராஜு.

சார் என்ன ஆச்சு சார்? என்று பதட்டமாக கேட்டான்

சிவா சார்  பீச் ரோட்ல மர்மமான முறைல இறந்து கிடக்கறாராம் என்ற அதிர்ச்சி தகவலை முகத்தில் உள்ள வேர்வையை துடைத்த படியே சொல்லிவிட்டு  சென்றான் கார்த்திக்.

         ( மர்மம் தொடரும்...)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக