முன்கதை சுருக்கம்: கார்த்திக் தினசெய்தி பத்திரிகைக்கு கோவையில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வருகிறான். அவனுக்கு துணையாக ராஜு என்ற சமையல்காரன் உடன் இருக்கிறான். காலை சிக்கிரமே எழுந்துவிடும் கார்த்திக் தனது பால்கனியில் வேடிக்கை பார்துக்கொண்டிருக்கிறான், அப்போது கார்த்திக்குடன் பத்திரிகையில் வேலை செய்யும் சிவா, கார்த்திக் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வழியாக ஜாக்கின் செலும்போது கொலை செய்யப்படுகிறான்.
( இனி... )
கார்த்திக் அவரசர அவரசரமாக தனது மேல்பையை மாட்டிகொண்டு படபடப்போடு ஆபீஸ் செல்கிறான்.
வா கார்த்திக்! பாடிய மார்ச்சுரிக்கு எடுத்துட்டு போயிருக்காங்க வா நாமளும் அங்கு போவம் என்றபடியே கார்த்திக்கை அழைத்துக்கொண்டு GH செல்கின்றார் தினசெய்தி துணை ஆசிரியர் பாலசுந்தரம்.அங்கு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் நடந்த செய்திகளை தனது உயர் அதிகாரிக்கு தெரிவித்து கொண்ருக்கிறார்.
இன்ஸ்பெக்டர் தொலைபேசியில் பேசிமுடித்த பின் தன்னை இன்ஸ்பெக்டருக்கு
அறிமுகம் செய்து கொண்டதோடு கார்த்திகை இன்ஸ்பெக்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார் பாலசுந்தரம்
நீங்கதா அந்த கார்திக்கா? சிவா கிட்ட கடைசியா பேசினது நீங்கதானா?
ஆமா இன்ஸ்பெக்டர் நான் தான் அந்த கார்திக்!
சரி அவர் உங்ககிட்ட என்ன பேசினாரு?
நான் என் அப்பார்ட்மென்ட் பால்கனில காலை 5 மணிக்கு நின்னுகிட்டு இருந்தேன் அப்போது என்ன கீழ இருந்து பார்த்த சிவா என்னை தொலைபேசியில் கூப்பிட்டு என்னையும் அவரோட ஜாக்கிங் வர சொன்னார் நான் வேற
ஒருநாள் வரதா சொல்லிட்டு போன கட் பண்ணிட்டேன். அப்பறம் பாலசுந்தரம் சார் சொல்லித்தான் சிவா கொலையான சம்பவம் எனக்கு தெரியும் என்று கார்திக் சொல்லிமுடிக்கும் பொது டாக்டர் நடேசன் மார்சுரியை விட்டு வெளியே வந்தார்.
ஒருநாள் வரதா சொல்லிட்டு போன கட் பண்ணிட்டேன். அப்பறம் பாலசுந்தரம் சார் சொல்லித்தான் சிவா கொலையான சம்பவம் எனக்கு தெரியும் என்று கார்திக் சொல்லிமுடிக்கும் பொது டாக்டர் நடேசன் மார்சுரியை விட்டு வெளியே வந்தார்.
டாக்டர்! என்று இன்ஸ்பெக்டர் அழைத்தவுடன்
டாக்டர் பேச ஆரம்பித்தார் கழுத்துல ஆழமா வெட்டு காயம் இருக்கு மொதல்ல தலையில பலமா அடிச்சிருக்காங்க அப்பறம் கத்தியால கழுத அறுத்திருகாங்க. இது ஒரு திட்டமிட்ட கொலை என்று கூறிவிட்டு சென்றார் டாக்டர் நடேசன்.
சிவாவுக்கு யாராவது எதிரி இருகாங்களா ? என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் ரவீந்தரன்
நோ இன்ஸ்பெக்டர் எனக்கு தெரிஞ்சு இல்லை சிவா எப்பவும் எல்லார் கூடவும் நல்ல பழகுவார் அவர கொடுரம்மா கொல்ற அளவுக்கு அவருக்கு யார் எதிரின்னு தெரியல என்றார் பாலசுந்தரம்
அவரு பொண்ணுக விசையதுல எப்படி? என்று அடுத்த கேள்வி கேட்டார் இன்ஸ்பெக்டர்
அவர் எங்க பத்திரிக்கையில நிருபர வேலை செய்யற நிருபமா, எப்பவும் அவர் கூடவே இருப்பாங்க. மத்தபடி அவங்களுக்குள்ள எப்படி பட்ட உறவுன்னு எனக்கு தெரியாது என்று பதில் சொல்லிகொண்டிருகும்போதே பாலசுந்தரத்தின் செல்போன் மணி ஒலித்தது. பாலசுந்தரம் தனது செல்போனை எடுத்து பார்த்தார் அதில் நிருபமா என்ற பெயர் தெரிந்தது.
( மர்மம் தொடரும்... )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக