முன்கதை சுருக்கம்: கார்த்திக் தினசெய்தி பத்திரிகைக்கு கோவையில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வருகிறான். அவனுக்கு துணையாக ராஜு என்ற சமையல்காரன் உடன் இருக்கிறான். காலை சிக்கிரமே எழுந்துவிடும் கார்த்திக் தனது பால்கனியில் வேடிக்கை பார்துக்கொண்டிருக்கிறான், அப்போது கார்த்திக்குடன் பத்திரிகையில் வேலை செய்யும் சிவா, கார்த்திக் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வழியாக ஜாக்கின் செலும்போது கொலை செய்யப்படுகிறான். இந்த செய்தி தெரிந்ததும் கார்த்திக்கும் துணையாசிரியர் பாலசுந்தரம்
சிவாவின் உடலை காண GH செல்கிறார்கள் . அங்கு இன்ஸ்பெக்டரை சந்திக்கிறார்கள். அப்போது பாலசுந்தரதிட்கு நிருபமாவிடம்
இருந்து போன் கால் வருகிறது
( இனி... )
சார்! சார்! நான் நிருபமா பேசறேன் யாரோ என் போன் நம்பருக்கு போன் செய்து சிவாவ கொலை செய்த மாதிரி என்னையும் கொலை செய்யப்போரதா பயமுறுத்தராங்க. சார் ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க!
பதட்டப்படாதிங்க நிருபமா நீங்க இப்ப எங்க இருகிங்கனு சொல்லுங்க நாங்க அங்க
வரோம் என்றார் பாலசுந்தரம்
நான் தி-நகர்ல உள்ள சிவப்பிரகாசம் அப்பார்ட்மென்ட்ல ரூம் நம்பர் 335 லதான் இருக்கேன். சார் ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் வாங்க எனக்கு பயமா இருக்கு.
பயபடாதிங்க நிருபமா இன்ஸ்பெக்டர் எங்க கூடதான் இருகார் அவரையும் கூட்டிக்கிட்டு இப்பவே அங்க வரோம் என்றபடி செல்போனை ஆப் செய்துவிட்டு பதட்டத்துடன் இன்ஸ்பெக்டரை
பார்த்து சிவாவை கொலை செய்தவங்க நிருபமாவையும் கொலைசெய்யப் போவதாக பயமுறுத்தி இருக்காங்க. இப்ப அவங்க தி-நகர் சிவப்பிரகாசம் அப்பார்ட்மென்ட்ல ரூம் நம்பர் 335 ல இருகாங்க என்று கூரி முடித்தார் பாலசுந்தரம் .
அப்போது கார்த்திக் பதட்டத்துடன் சார் அதே அப்பார்ட்மென்ட்லதான் சிவாவும் குடியிருந்தாறு நானும் அதே அப்பார்ட்மென்ட்லதான் குடியிருக்கேன்.எனக்கு அந்த அப்பார்ட்மென்ட்ல ரூம் ஏற்பாடு செய்தது சிவா சார் தான். இன்னைக்கு காலையில நான் என்னுடைய பால்கனில இருந்து பார்த்த போது நிருபமா குடியிருக்குற 335 ஆம் நம்பர் ரூம் பூட்டியிருந்தது நான் அந்த பக்கமா வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தப்போ பூட்டியிருந்த
ரூம்ல இருந்து லைட் எரிஞ்சு ஆப் ஆச்சு அப்பத்தான் சிவா சார் அப்பார்ட்மென்ட் கீழ இருந்து எனக்கு போன் செய்தாரு. அப்ப எனக்கு அந்த 335 ஆம் நம்பர் ரூம் நிருபமாவுடையதுன்னு தெரியாது.
யாரோ அந்த அப்பார்ட்மென்ட்ல இருந்துதான் சிவாவை கொலை செய்திருக்கணும் என்றார் இன்ஸ்பெக்டர் ரவீந்தரன் சந்தேகபடும் தோரணையில்.
சரி வாங்க உடனே அங்க போகலாம் என்று பாலசுந்தரம் கூறியதும் மூவரும் ஜீபிட்குள் சென்று அமர்ந்தனர்.
( மர்மம் தொடரும்...)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக