சனி, செப்டம்பர் 24, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்... (மர்ம தொடர்) பாகம்- 4


முன்கதை சுருக்கம்: கார்த்திக் தினசெய்தி பத்திரிகைக்கு கோவையில் இருந்து  சென்னைக்கு மாற்றலாகி வருகிறான். அவனுக்கு துணையாக ராஜு என்ற சமையல்காரன் உடன் இருக்கிறான். காலை சிக்கிரமே எழுந்துவிடும் கார்த்திக் தனது  பால்கனியில் வேடிக்கை பார்துக்கொண்டிருக்கிறான், அப்போது கார்த்திக்குடன்    பத்திரிகையில் வேலை செய்யும் சிவா, கார்த்திக் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு   வழியாக ஜாக்கின் செலும்போது கொலை செய்யப்படுகிறான்.  இந்த செய்தி தெரிந்ததும்  கார்த்திக்கும்  துணையாசிரியர் பாலசுந்தரம்  
சிவாவின் உடலை  காண GH செல்கிறார்கள் . அங்கு  இன்ஸ்பெக்டரை சந்திக்கிறார்கள். அப்போது பாலசுந்தரதிட்கு நிருபமாவிடம் 
இருந்து போன் கால்  வருகிறது . அப்போது நிருபமா பாலசுந்தரதிடம் தன்னை கொலை செய்ய போவதாக 
யாரோ மிரட்டுவதாக கூருகிறாள் அதை கேட்டு  கார்த்திக், பாலசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் மூவரும் நிருபமாவை சந்திக்க செல்கின்றனர்.
    
                          ( இனி... )


மூவரும் ஜீப்பில் சென்று அடுக்குமாடி குடியிருப்பை அடைந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் ஜீப்பை நிறுத்திவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் செல்லும்போது அங்கு வருவோர், போவோர் அனைவரையும் சந்தேக கண் கொண்டு பார்த்தார். அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே லிப்டினுள் மூவரும் சென்றனர். அப்போது லிப்ட் ஆபரேடர் சண்முகத்தை பார்த்து இன்ஸ்பெக்டர்

உன் பேர் என்ன? என்று கேட்கிறார்

ஸா! சார் என் பே பேர் சண்முகம் சார்!

இங்க எத்தன வருசமா லிப்ட் ஆபரேட்டரா வேலை பாக்கற?

ஆறு மாசமா சார்?

இதுக்கு முன்னாடி எங்க இருந்த?

உஸ்மான் ரோடு சார்!

இந்த அப்பார்ட்மென்ட்ல குடியிருந்த சிவாவ தெரியுமா?

தெரியும் சார்!

அவர் கொலை செய்யப்பட்டது தெரியுமா?

சா.....ர்! என்று வாயடைத்து நின்றான் சண்முகம் அதற்குள் அவர்கள் செல்லவேண்டிய இடம் வந்துவிட்டது!

நாங்க எப்ப கூப்பிடாலும் ஸ்டேஷன் வரணும் சரியாய் என்று இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் கூரிவிட்டு மூவரும் நிருபமா இருக்கும் அறையை நோக்கி சென்றார்கள்!

  நிருபமா அறை கதவை தட்டியதும் நிருபமா பதட்டத்துடன் யா... யாரு? என்று கதவினருகே சென்று கேட்கிறாள்!

நான்தாம்மா பாலசுந்தரம் கதவ திறம்மா... என்று சொன்னதும் நிருபமா கதவை மெல்ல திறந்தாள்.

                         ( பதட்டம் தொடரும்... )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக