சனி, செப்டம்பர் 10, 2011

குறியீடுகள் பெரிதாக்கப்பட்டது... தத்துவம் மறைந்துவிட்டது...


                                          சாஸ்திர சம்பரதாயங்கள் தேவையா? இல்லையா? என்று பலர் விவாதிக்கும் நிலையில், நம் முன்னோர்கள் வகுத்த சம்பரதாயங்கள் தேவை, தேவையில்லை என்பதைவிட நாம் அதனை புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை. முன்னோர்கள் நம்மைவிட நன்றாகவே வாழ்கையை பற்றி யோசித்திருக்கிரார்கள்  என்பதுதான் உண்மை. இப்போது நமக்கு அத்தகைய சிந்தனை இயலாது போனதற்கு நம்முடைய வாழ்க்கை முறை மாற்றமே காரணம். தொலைக்காட்சியும், அலைபேசியும் நம்முடைய இயல்பான சிந்தையை மழுங்கடித்து விட்டது என்பதே உண்மை. நம் முன்னோர்கள் ஒரு ஆழ்ந்த உள் அர்த்ததிட்காக  வகுத்த குறியீட்டை பெரிதாக எடுத்துகொண்டு அதன் உண்மையான அர்த்தத்தை குழிதோண்டி புதைத்துவிட்டோம்.


                                  நாம் வாழ்க்கையை பற்றி புரிந்துகொள்ளவில்லை, முன்னோர்கள் வகுத்த வழிபாடு முறையையும் புரிந்துகொள்ளவில்லை. இதற்கான சரியான உதாரணம் நாம் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரை கடலில் கறைப்பது. முன்னோர்கள் வாழ்க்கை தத்துவமாகிய எதுவுமே உண்மையில்லை நம்முடைய வாழ்கையும் அந்த விநாயகர் சிலை போல கறைந்துபோகும் என்பதை உணர்த்தவே விநாயகர் உருவத்தை களிமண் பொம்மையாக்கி அதை கடலில் கறைத்து வழிபட்டனர். அப்படி களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை கடலில் கறைகும்போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வாழ்க்கை தத்துவமும் பலருக்கு குறிப்பால் உணர்த்தப்பட்டது. இப்போது நிலைமை வேறு ஆணவம்,அகங்காரம் மற்றும் அடுத்தவர் நலத்தை பற்றி அக்கறை கொஞ்சம்கூட இல்லை, இயர்க்கை மாசுபடுத்துகிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாமல். பல
ரசாயனம்,வேதிபொருட்களால்  ( plastoparish ) உருவான மிக பிரம்மாண்டமான  ஒரு விநாயகர் சிலை செய்து அதில் உள்ள வண்ணகலவை ( paint ) காய்வதற்குள் அதை எடுத்துவந்து தன்னுடைய ஆடம்பரத்தை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டுவது போல் ஊர்வலமாய் அதை கொண்டுவது நன்றாக உள்ள நதிநீரை, கடல் நீரை, குட்டையை மற்றும்  விநாயகர் சிலை கறைபதட்கு என்றே தோண்டப்பட்ட குழிக்குள் தண்ணீர் லாரிமுலம் கொண்டுவரப்பட்ட நீரில் அந்த பிரம்மாண்டமான  அந்த அழகான விநாயகரை முழ்கடித்து மிக இயல்பாய்  கறைய வேண்டிய விநாயகரை  குச்சி எடுத்து அடித்து அந்த சிலையை உடைத்து ஒரு கொடுரத்தை நிகழ்த்துவது கடவுளுக்கும் இதே கதிதான் பூமிக்கு வந்தால் என்று கடவுளையே பயமுறுத்தும் வேலை மிக ஜோராக நடந்துகொண்டிருகிறது மனதை கசப்பாக்குகிறது. அன்று விநாயகர் பிறந்தார் என்பதற்காக தர்ம அடிவாங்குவது நியாயமா?

தன்னை கடலில் கறைகும்படி ஒருபோதும் விநாயகர் கேட்டதில்லை,ஒரு குறியீடாக நாம்தான் அதை செய்கிறோம் அந்த குறியீடு வாழ்கையை பற்றியது வாழ்க்கைக்கு பின் அடையவேண்டிய முக்திக்கான வழிபாடு. அப்படிப்பட்ட வழிபாட்டை நதிநீர் மாசடையவும், குட்டிக்  குட்டி மீன்கள் வேதிபொருட்களால் சாவதட்கல்ல என்பது மக்கள் எப்போது உணர்வார்களோ அப்போதுதான் இயற்கை அழிவது தவிர்க்கப்படும். அதுவரை விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை உண்பதோடு நமது  வழிபாட்டை நிறுத்திக்கொள்வோம். அதுவே விநாயகருக்கும், இயற்கைகும்  செய்யும் பெரும் தொண்டாக இருக்கும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக