திங்கள், செப்டம்பர் 26, 2011

ஓர் இரவில்... ஓர் மரணம்... (மர்ம தொடர்) பாகம் - 5



முன்கதை சுருக்கம்: கார்த்திக் தினசெய்தி பத்திரிகைக்கு கோவையில் இருந்து  சென்னைக்கு மாற்றலாகி வருகிறான். அவனுக்கு துணையாக ராஜு என்ற சமையல்காரன் உடன் இருக்கிறான். காலை சிக்கிரமே எழுந்துவிடும் கார்த்திக் தனது  பால்கனியில் வேடிக்கை பார்துக்கொண்டிருக்கிறான், அப்போது கார்த்திக்குடன்    பத்திரிகையில் வேலை செய்யும் சிவா, கார்த்திக் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு   வழியாக ஜாக்கின் செலும்போது கொலை செய்யப்படுகிறான்.  இந்த செய்தி தெரிந்ததும்  கார்த்திக்கும்  துணையாசிரியர் பாலசுந்தரம்  
சிவாவின் உடலை  காண GH செல்கிறார்கள் . அங்கு  இன்ஸ்பெக்டரை சந்திக்கிறார்கள். அப்போது பாலசுந்தரதிட்கு நிருபமாவிடம் 
இருந்து போன் கால்  வருகிறது . அப்போது நிருபமா பாலசுந்தரதிடம் தன்னை கொலை செய்ய போவதாக 
யாரோ மிரட்டுவதாக கூருகிறாள் அதை கேட்டு  கார்த்திக், பாலசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் மூவரும் நிருபமாவை சந்திக்க செல்கின்றனர்.க்டரை சந்திக்கிறார்கள். அப்போது பாலசுந்தரதிட்கு நிருபமாவிடம் 
இருந்து போன் கால்  வருகிறது . அப்போது நிருபமா பாலசுந்தரதிடம் தன்னை கொலை செய்ய போவதாக 
யாரோ மிரட்டுவதாக கூருகிறாள் அதை கேட்டு  கார்த்திக், பாலசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் மூவரும் நிருபமாவை சந்திக்க செல்கின்றனர்.அப்போது   இன்ஸ்பெக்டர் லிப்ட் ஆபரேடர் சண்முகத்தை விசாரிக்கிறார்.
( இனி...)


நிருபமா பயந்தபடியே கதவை திறக்கிறாள்!

பயபடாதேமா நாங்கெல்லாம் உன் கூடவே இருகிறோம் உனக்கு ஒன்னும் ஆகாது என்று பாலசுந்தரம் ஆறுதல் சொன்னபடியே அறைக்குள் நுழைந்தார்.

இன்ஸ்பெக்டர் நிருபமாவிடம் விசாரணையை ஆரம்பித்தார்.

நீங்கதான் நிருபமாவ?

ஆ ஆமா சார்!

சரி என்ன நடந்ததுன்னு சொல்லுங்க?

நான் என் சொந்த ஊரு  திருவனந்தபுறத்துல இருந்து ஒருமணி நேரத்துக்கு முன்னாடிதான் என் அறைக்கு வந்தேன். என்னுடைய அறைய திறந்ததும் யாரோ ஜன்னல் வழியா என் ரூமுக்கு வந்து என்னுடைய எல்லா பொருட்களையும் அலங்கோலப்படுத்தி இருக்காங்க
என்று விம்மிய படி கூறினால் நிருபமா.

நகை? பணம்? எதாவது காணாம போயிருக்க?

இல்லை இன்ஸ்பெக்டர்! நான் நகையும்,பணமும் ஊருக்கு போகும்போது எடுத்துட்டு போய்டேன். அதனால எதுவும் திருட்டு போகல.

சரி உங்களுக்கு யாருமேலயாவது  சந்தேகம் இருக்க? 

இல்லை இன்ஸ்பெக்டர் எனக்கு இப்ப உள்ள சூல்நிளையில என்னால அந்தளவுக்கு சிந்திக்க முடியல.

சரி உங்களுக்கு போன் செய்து மிரடியதா சொன்னிங்களே.

ஆமா இன்ஸ்பெக்டர், நான் என் பொருட்கள் எல்லாம் அலங்கோலமா இருக்கறத பார்த்து பயந்து போய் இருந்தப்ப 
ஏதோ ஒரு நம்பர்ல இருந்து போன் வந்தது. அந்த குரலை இதுவரைக்கும் நான் எங்கயும் கேட்டதில்லை. அவன் சொன்னான் மரியாதையா நாங்க  தேடுறத
எங்ககிட்ட கொடுத்துடு இல்லை சிவா செத்த மாதிரி நீயும் சாவேன்னு சொல்லிட்டு வச்சுட்டான். சார் சிவாவுக்கு என்ன ஆச்சு அவரு உயிரோடதானே  இருக்காரு?

சாரி நிருபமா!அவன் போன்ல சொன்னமாதிரி சிவாவ கொலை செய்துட்டான்! என்று பதட்டத்தோடு 
பாலசுந்தரம் பதில் கூறினார்.

மிஸ். நிருபமா உங்க போன குடுங்க என்று இன்ஸ்பெக்டர் நிருபமா போனை வாங்கி அந்த நம்பரை பரிசோதித்தார். 

இந்த நம்பர் உங்க யாருக்காவது தெரியுமான்னு பாருங்க 7824921949 .

சார் இருங்க நான் பார்க்கறேன் என்றபடி இன்ஸ்பெக்டர் சொன்ன நம்பரை கார்த்திக் தனது 
செல் போனில் டயல் செய்தான். கார்த்திக் முகத்தில் ஒரே அதிர்ச்சி 
ஒ! மை காட்! இது என்னுடைய சமையல்காரன் ராஜுவுடைய நம்பர்.

அதை கேட்டு மற்ற மூவருமே அதிர்ச்சி அடைந்தனர்.

        ( மர்மம் தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக