பறவைகள்தான் எவ்வளவு அழகானவை.நாம் காலையில் அந்த பறவைகளை பார்த்து ரசிக்கமலேயே நாம் அந்த பறவைகளை தாண்டி செல்கின்றோம். பறவைகள் இயற்கையின் அடையாளச் சின்னங்கள். ஒரு பறவை தன் குஞ்சகளுக்கு உணவு கொண்டு சென்று ஊட்டும் தாய்மை உணர்வை நாம் பறவையிடம்தான்
பார்த்து பழக வேண்டும். எப்போது ஒரு சில பெண்கள் தங்கள் பெற்ற பிள்ளைக்கு தாய்பால் கொடுக்காமல்
மாட்டுப்பாலை கொடுத்து தங்கள் பிள்ளையை வளர்கின்றனர். தாய்பால் கொடுத்தல் அந்த பெண்களின் அழகு
பறிபோய்விடுமாம். அப்படி அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தாய் தாயே அல்ல அவள் சாயம் பூசிய
பேய். ஒரு குழந்தை பிறக்கும்போது கொடுக்கப்படும் தாய்பால்தான் அந்த குழந்தையின் மன வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் சிறந்தது என்று அறிவியல் கூரும் உண்மை. அந்த பறவைகள் தங்கள் உணவை தேடி பல மைல் தூரம் பயணிக்கிறது அப்படி கிடைக்கும் உணவை தன் குட்டிகளுக்கு கொடுத்துவிட்டு தாய் பறவையானது சிலசமயம் பட்டினியாய் இருக்கும் இதுதானே தாய்மை.சொல்லப்போனால்
மனிதன் மிருகங்களிடமும்,பறவைகளிடமும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் மிக அதிகமாக உள்ளது.
பறவைகள் எப்போதுமே சுதந்திரமானவை. அவைகள் சுதந்திர காற்றை எப்போதுமே சுவாசிக்கும். பறவைகளுக்கு எல்லைகோடு கிடையாது பாஸ்போர்ட், விசா என்று எதுவுமே தேவையில்லை
அவைகள் பறக்கும்போது முதுகில் டன் கணக்கில் மற்றவர்களை அழிக்க அணு ஆயுதத்தை எடுத்து செல்வதில்லை. அதற்கு அடுத்த நிமிடம்
பற்றிய பயமில்லாமல் பறக்கிறது.
பறவைகள் எப்போதுமே கூண்டில் அடைபடுவது எந்த பறவைக்கும் பிடிக்காது. ஆனால் மனிதர்கள் சிலபேர்
அந்த பறவையை காசு கொடுத்து வாங்கிவிட்டதால் அது தனக்கு அடிமை என்று கொடூரமாக அந்த பறவைகளை கூண்டில் அடைத்து தான் பறவைகளின் ரசிகன் என்று பெருமையாக சொல்லிகொள்ளும்போது. இயற்கையாக பறவைகள் வானில் பறக்கும்போது
அந்த பறவையின் அழகை ரசிப்பதுதான் உண்மையான ரசனை. அதனை கூண்டில் அடைத்து அதை நாம் கொடுமைபடுத்திவிட்டு தான் பறவைகளின் ரசிகன் என்று சொல்வது சரியானது அல்ல.
வண்ணம், ரக்கை விரித்து பறக்கும் அழகு என்றுமே நமக்கு ஒரு அழகான உணர்வை ஏற்படுத்தும்.அதை உணர மனிதர்கள் பழகவேண்டும்.
சிட்டுக்குருவி இனத்தைபோல் பல பறவைகள் இனத்தை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். நமது செல் போன் டவர் மூலமாக வரும் அலைவரிசை சிட்டுக்குருவிகள் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தி
அதன் கருவையே சிதைத்துவிடுகிறது .பறவைகள் அழிவை தடுக்க மனிதர்கள்
முயலவேண்டும். பறவைகள் எப்போதுமே மனிதர்களுக்கு எந்த தீங்கையும் செய்ததில்லை. ஆகையால் அதை ரசித்து, அவற்றை பாதுகாப்பது மனிதராகிய நம் கடமை.





yes nature is beautu
பதிலளிநீக்கு