செவ்வாய், நவம்பர் 29, 2011

பரதநாட்டியம் கலையும் அழகும்...


பரதநாட்டியம் நமது தமிழ் கலாச்சாரத்தினை உணர்த்தும் கலை. பரதநாட்டியம் மனதை இறைவனோடு ஒன்றாக்கும் கலையம்சம். நாம் கடவுள் என்று வணங்குவது  சிவன், அவனே நாட்டியத்தின் தலைவன். மனம் லயித்து உடல் லயித்து ஆடும் கலையின் ஆர்ப்பரிக்கும் அழகு நம்மை ஒரு மயில்தோகையால் மனதை மென்மையாய் வருடுவது போல் உள்ளம் பரவசமடையும். நாட்டியம் ஆடும் பெண்ணை வெறும் பெண்ணாய் மட்டும் பார்க்கமுடியாதபடி ஆடும் அவளே நாட்டியமாய் மாறுவதே நாட்டியத்தின் உச்சகட்டம். பரதம் வெறும் நாட்டியம் மட்டுமல்ல அது நமது கலாச்சாரத்தின் வெளிப்பாடு.
தமிழ் கவிதைகளின் பொற்காலம் என்று சொல்லப்படுகின்ற தொல்காப்பியம், சிலப்பத்திகாரம் ஆகிய நூல்கள் படித்தோமானால் அதில் 
பரதநாட்டியதிட்கு என்று ஒரு தனியிடம் உண்டு. சிலப்பதிகாரத்தில்   "மாதவி" என்ற தேவதாசி குடும்பத்தை சேர்ந்த நாட்டியத்  தாரகையால் 
மதிமயங்கி கோவலன் அவன்  கட்டிய மனைவி கண்ணகியை விட்டு மாதவியை தேடிச் சென்றான்
இவ்வாறாக  அமரகாவியம் உருவாக ஒரு  காரணமாக அமைந்தது பரதநாட்டியம் எனலாம் .


பரதநாடியத்தை "சதிராட்டம்" எனவும் அழைப்பார்கள். அன்றைய காலகட்டத்தில் கோவிலில் தேவதாசிப் பெண்கள் என்று அழைக்கப்படும் பெண்கள் கோவிலில் நடனமாடி இறைவனுக்கு தொண்டு செய்தனர். அவர்கள் ஆடும் கலையில் 
மிக சிறப்பானவர்கள். அரசர்கள் மண்டபத்திலும், கோவில் விழாக்களிலும் இவர்களது நடனம் 
சிறப்புவாய்ந்ததாக இருக்கும். பிற்காலத்தில்  தேவதாசி என்ற இனம் பலரது எதிர்ப்பினால் காணமல்போனது. 

பரதநாட்டியமும், கர்நாடக இசையும் சேர்த்து பக்தி என்று சொல்லப்படுக்கிறது. ஐந்து வகை  நாட்டியங்களில்  ஒன்று இந்த 
பரதநாட்டியம் மற்றவை  ஒடிசி, மோகினியாட்டம், குச்சிபுடி, கதகளி ஆகும்.

பரதநாட்டியம் - நெருப்பு 
ஒடிசி             - நீர்
மோகினியாட்டம் - காற்று
குச்சிபுடி - நிலம்
கதகளி - ஆகாயம்
என்று ஐம்பூதங்களை உள்ளடக்கியது.



                                    பரதநாட்டியம் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது

  •   ரசம் - பாசத்தை, பரிவை உணர்த்துவது
  •   பாவம் - உணர்சிகளை வெளிப்படுத்துவது
  •  கிரியாஸ் - செயலை உணர்த்துவது
  •  ஸ்ரின்காரம் - காதலை, பக்தியை உணர்த்துவது



பரதநாட்டியத்தின் மூன்று பிரிவுகள்

  • அபிநயம்- நாட்டியத்தின் மூலமாக கதை சொல்வது
  • நரிட்ட - இசைக்கு ஏற்ப நடன அசைவுகள் மட்டும் கண்பிப்பது
  • நரித்ய- அபிநயமும், நரிட்டவும் சேர்ந்த  கலவை.

                                                 பரதநாட்டிய நடன வகைகள்
  • அல்லரிப்பு - தாளமிடுபவர் ஜதிக்கேட்ப நடன அசைவுகள் இருப்பது.
  • குடுவம் - பழங்காலத்து நடன முறை ஜதிக்கேட்ப நடனமாடுவது.     
  • கணபதி வந்தனம் - கணபதியை வணக்குவது. இறைவழிபாடு.
  • ஜதிஸ்வரம்- தாளதிட்கேட்ப உடல் அசைவுகள் மற்றும் கால் அசைவுகள் கொண்டது.


  • ஷப்டம் - பக்தி இசைக்கேட்ப, பாடல் வரிகளுக்கு தகுந்தபடி நடனமாடுவது.
  • வர்ணம் - ஒரு கதையை மையப்படுத்தி காதலை வெளிபடுத்தும் மிக நீண்ட ஒரு அசைவுகள் கொண்டது.


  • படம் - நடனதிட்கு மத்தியில் நடனமாடுபவர்கள் பேசுவது மற்றும் பாடுவது.
  • ஸ்துதி- நடனதிட்கு இடையே ஸ்துதி பாடுவது.

  • கூத்து - நாடகத்தோடு கூடிய நடனம்
  • ஜவளி - இறக்கையை வணங்கி நடனமாடுவது.
  • தில்லான - முழுவதும் நடனத்திட்கேட்ப பாடுவது. எல்லா நடன அசைவுகளும் உள்ளடக்கியது.
பரதம் நம் கண்களுக்கு விருந்து... மனதுக்கு அமைதியைத் தரும் மருந்து...




2 கருத்துகள்: