சனி, ஜூன் 04, 2011

"அழகர்சாமியின் குதிரை" ஒரு அழகான தமிழ் படம்

      "அழகர்சாமியின் குதிரை" படம் ஒரு பெரிய மாஸ் ஹீரோ இல்லாமல் வெற்றிபெற்றிருக்கிறது  என்றால் மக்களின் ரசனை மாற்றம் அடைந்திருக்கிறது என்றுதான் 
அர்த்தம். ஒரு அழகான கிராமத்து வாழ்வை படம்பிடித்து காட்டுகிறது இந்த படம்.
மழை பொய்த்துப்போன ஒரு அழகான  கிராமம் அந்த கிராமத்தைக்  காக்கும் சாமியாக அழகர்.
அந்த அழகர்சாமியின் மரக்குதிரை காணமல் போவதாக ஆரம்பித்து கிராமத்து மக்களின் வாழ்க்கை,அவர்களுக்கே உரியதான ஊர் திருவிழா அதை தடுத்து நிறுத்த ஒருவன் என வழக்கமான கிராமத்து கதைதான் என்றாலும், உடனே உதட்டு சாயம் பூசிய, மஞ்ச சட்டை அணிந்த ராமராஜனை போல் ஒரு ஹீரோ இல்லாமல். ஒரு அழுக்கான மனசுமட்டும் அழகான ஒரு கிராமத்துக்  கதாநாயகனாக நடிக்கவைத்திருப்பது சினிமாவை எதார்த்த வாழ்க்கைக்கு கொண்டுவருவது போல் உள்ளது.

ஒரு அழகான கிராமத்துக்  கதையை இசையால் ஈர்த்திருக்கிறார் இளையராஜா.
பாடல்கள் கேட்க இனிமை.

இந்த படத்தில் இன்னொரு காதல் ஜோடி  காண்பிக்கப்படுகிறது.
இந்த காதல் ஜோடி  சாதியை உடைத்தெரிகிறது. இதை உணர்த்தும் விதமாக "அலைகள் ஓய்வதில்லை" பாரதிராஜா அவர்களின்
 படத்தை  இந்த காதலர்கள்  பார்பதாக ஒரு காட்சியை  வைத்திருப்பது  இயக்குனரை பாராட்டும்படியாக  அமைந்திருகிறது.

மொத்தத்தில்   அழகர்சாமியின் குதிரை படம் பழைய பாரதிராஜா படம் பார்ப்பது போல் இருகிறது. காரணம் "16 வயதினிலே" படத்தில் அழகான கமல ஹசனை சப்பாணியாக காண்பித்து ஒரு ஹீரோவிற்கு அழகு தேவையில்லை என்று முதன் முதலில்  படமெடுத்து காண்பித்தவர் அவர்தான். ஆகையால்   "16 வயதினிலே part -2" என்பதை போல அமைந்திருக்கிறது இந்த படம்.    


1 கருத்து:

  1. nalla vimarsanam ...... padathil comediyannaaga sitharikkappatta kallai(kadavulai) maranthuteengalaeeee...

    kodaangigalin kathaapathiram......unmaiyil indraya poli saamiyaargalai ninaivuku konduvanthathu.....

    eluthu nadai ------ nalla valarchi.....

    பதிலளிநீக்கு