வியாழன், ஆகஸ்ட் 11, 2011

சோமாலியர்கள் (Sad story of somaliya people)...

People  of  Somaliya  

                                               இந்த படத்தை உங்களால் ரசித்து பார்க்க முடிமா? இதுதான் சோமாலிய நாட்டின் இன்றைய நிலைமை. சோமாலிய நாடு ஹோர்ன் ஒப் ஆப்ரிக்கா பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் நாடு. இந்த நாட்டில் கிட்டத்தட்ட 15 - 17 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என்பதை வீட வறுமையால் சாகின்ற நிலையில் இருகின்றனர் என்பதே உண்மை. உணவையும், உணர்வையும் தேடி அலையும் மக்களின் அன்றாட வாழ்கையை நினைக்கும்போது நாம் வீணாக்கும் ஒவ்வரு உணவு பொருட்களும் நம்மை பார்த்து   மௌனமாய் நம்மை கேள்விகேட்பது நமக்கு தெரியாமலே போய் விடுகிறது. கிட்டத்தட்ட மழை வந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. வறட்சியின் உச்சத்தில் சோமாலிய நாடு தள்ளப்பட்டுள்ளது. இறப்பு என்பது அவர்களை பொறுத்த வரையில் அது ஒரு சாதாரண நிகழ்வு என்பது போல் மனித உயிர்க்கு மதிப்பில்லாமல் போய் கொண்டிருக்கிறது. 

சோமாலியாவில்  தினம் பலர் இறகின்றனர். இறப்பது உலகில்  எல்லா நாடுகளிலும்  இருக்கின்ற ஒன்று என்று நம்மால் ஆறுதல் பட்டுக்கொள்ள முடியாது காரணம் இறப்பது பசியால் என்பதே மனம் கசக்கும் உண்மை .மகாகவி  பாரதி சொன்னார்  "தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்". இந்த சோமானிய நாட்டை பார்க்கும் போது எத்தனை ஜகத்தை நாம் அழிக்கப்போகிறோம். அவர்க்கு தேவை உணவு அதை தரலாம் என்றாலும் தீவிரவாதமும், ராணுவமும் அவர்களது பசியை விட கொடுமையாக அவர்களை ஆட்டிப்படைகிறது.    
தீவிரவாதம் என்பது இப்படித்தான் முளைகிறது ஒருவாய் சோறு கொடுத்தால் தன் தாயையே சுடசொன்னாலும் யோசிக்காமல் சுட்டு சாகடிக்கும் குணம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. உணவுக்கு கையேந்தும் மக்கள் ஒருபக்கம் என்றல் துப்பாக்கியை கையில் ஏந்தும் தீவிரவாதம் ஒருபக்கம். இப்படி மனிதனின் அன்றாட வாழ்க்கை என்று நமக்கு இருகிறதா இல்லை இன்றே கடைசி நாளாக அமைய போகிறதா என்ற கேள்விகளோடு வாழ்க்கை நகர்ந்தால் அது நரகத்தை விட மோசமானது என்பது அங்கு வாழ்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விசையம்.  

இந்த நிலைமையில் ராணுவமும், தீவிரவாதமும் மக்களுக்காக கொடுக்கப்படும் உணவை துப்பாக்கி முனையில் பறித்து செல்கிறது இதை தடுக்க நினைத்தால்  அவர்கள் அங்கேயே சுட்டு கொள்ளபடுவர்கள். ஒரு நாடு பஞ்சத்தில் அடிபட்டு அதோடு தீவிரவாதம், ராணுவத்திற்கும் அடிமைப்பட்டு பசியால் வாடி உடல் மெலிந்து இறுதியாய் அந்த பசிக்கே உயிர் துறப்பது  சோமாலியர்களின் தினம் நடக்கும் சோக கதைகள் ஆகும். 
இங்கு செத்து கிடபவர்கள் இராணுவதால் நாயை போல் சுட்டு கொல்லப்பட்டவர்கள். ஈவு, இரகம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் இருக்கும் நாட்டில் இதைதவிர வேறெந்த காட்சியை காணமுடியும். சோற்றில் கல் இருந்தால் அரசையும், அதை சார்தவர்கலையும் குறைசொல்லும் நாம் சோமானிய மக்களை பார்க்கும்போது நம் வாழ்கையை பற்றி நாம் என்ன குறை சொல்ல போகிறோம். இங்கு நமக்கு இலவசாமாக அரிசி கிடைகிறது அதையே குறைசொல்லும் நாம், சோமாலியாவில் மக்கள் வாழ்கையை பார்த்து என்ன சொல்ல போகிறோம். இங்காவது இலவச என்று மக்களுக்கு எல்லாமே கிடைகிறது. அங்கு சோமாலியா மக்களுக்கு இலவசமாய் கிடைப்பது மரணம் ஒன்றுதான்.
பசியை விட கொடுமையான விசையம் வேறென்ன இருக்க முடியும். முடிந்தால் அவர்களுக்கு உதவுவோம். முடித்தவரை எதையும் வீணாக்காமல் எல்லோர்க்கும் உதவும் நோக்கோடு மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வோம். இன்று சோமானியர்களுக்கு வத்த நிலைமை நாளை நமக்கும் வரலாம் என்ற நோக்கோடு அடுத்தவர்களுக்கு உதவினால்  நாம் வாழும் வாழ்கையை பெருமை அடையும்.    

1 கருத்து: